நாளை முதல் பேருந்துகளில் பேருந்து நிறுத்தம் அறிவிக்கும் திட்டம்!!

 

தமிழகத்தில் அரசு பேருந்துகளில் பெண்கள், குழந்தைகள், முதியவர்கள்,மாற்றுத் திறனாளிகள் அவருடன் பயணிக்கும் ஒருவர் இவர்கள் அனைவரும் இலவசமாக பயணிக்கலாம். இதில் மகளிருக்கான இலவச பேருந்துகள் பிங்க் பேருந்துகளாக மாற்றப்பட்டுள்ளன. இதனை மேலும் மேம்படுத்தும் வகையில் மாநகரில் பேருந்துகளில் பயணிக்கும் பயணிகளுக்கு அடுத்தடுத்த பேருந்து நிறுத்தங்களின் பெயர்களை ஒலிபெருக்கி மூலம் அறிவிக்கும் திட்டம் செயல்படுத்தப்பட்டுள்ளது.

இத்திட்டம் நாளை முதல்  தொடங்கி வைக்கப்படுகிறது. இதன்படி பேருந்துகளில் பேருந்து நிறுத்தங்களை அடைவதற்கு 300 மீட்டர் முன்பாக  பேருந்து நிறுத்தங்களின் பெயர்கள் தமிழ், ஆங்கிலத்தில் ஒலிபரப்பு செய்யப்பட உள்ளது.இதற்காக சென்னை மாநகர பேருந்துகளில் உட்புறத்தில் 6 ஒலிபெருக்கிகள் பொருத்தப்பட்டு வருகின்றன. பேருந்துகளில் நிறுத்தும் இடம் ஒலிபரப்புகளுக்கிடையே விளம்பரங்களும் ஒலிபரப்பப்பட உள்ளன. 


மத்திய அரசின் நிர்பயா திட்டத்தின் கீழ் மாநகர பேருந்துகளில் நடக்கும் திருட்டுகளைத் தடுக்கவும்,பெண் பயணிகளின் பாதுகாப்பை கருத்தில் கொண்டும் சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.  அதுவும், 2200 மாநகர பேருந்துகளில் நவம்பர் மாத இறுதிக்குள் சிசிடிவி கேமரா பொருத்தப்படும் என மாநகர போக்குவரத்து கழகம் தகவல் தெரிவித்துள்ளது. 

சபரிமலை போறீங்களா?! 60 நாட்களுக்கு உணவு, தங்குமிடம் எல்லாமே இங்கே ஃப்ரீ தான்!!

அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

மப்பேறி தள்ளாடும் நாய்!! மதுவை குடித்ததால் பரிதாபம்!!