சூப்பர்.. ஜனவரி 18ம் தேதி பொது விடுமுறை! பள்ளி, கல்லூரிகளுக்கும் விடுமுறை! தமிழக அரசு அறிவிப்பு!

 

தமிழகத்தில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு பள்ளி, கல்லூரிகளுக்கு ஜனவரி 17ம் தேதி வரையில் விடுமுறை அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், தற்போது பொங்கல் பண்டிகையைக் கொண்டாட சொந்த ஊருக்குச் சென்றிருப்பவர்கள் திரும்ப வசதியாக ஜனவரி 18ம் தேதி பொது விடுமுறையாக தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது.

தமிழ்நாடு முழுவதும் அதிகாலையில் இருந்தே பொங்கல் பண்டிகையை முன்னிட்டு மக்கள் அனைவரும் புத்தாடை அணிந்து, வாசலில் வண்ண கோலமிட்டு, பொங்கல் பானைக்கு மஞ்சள், குங்குமம் வைத்து, மஞ்சள் கொம்பு செடியை கட்டி, மங்களகரமாக புத்தரிசியில் பொங்கலிட்டு உற்சாகமாக கொண்டாடி வருகின்றனர். ஆலயங்களிலும் அதிகாலையில் இருந்தே பக்தர்கள் கூட்டம் நிரம்பி வழிந்தது.

தமிழர் திருநாளை மக்கள் மகிழ்ச்சியுடன் கொண்டாடும் வகையில், ஜனவரி 18ம் தேதி தமிழக அரசு பொதுவிடுமுறையாக அறிவித்துள்ளது. நாளை ஜனவரி 16ம் தேதி மாட்டுப் பொங்கல், 17ம் தேதி காணும் பொங்கல் திருநாள். இந்நிலையில், இன்று முதல் வரும் ஜனவரி 17ம் தேதி வரை பள்ளி, கல்லுாரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், மீண்டும் ஜனவரி 18ம் தேதி பள்ளி, கல்லுாரிகள் திறக்கப்படுகின்றன. அரசு தரப்பில் வரும் ஜனவரி 17ம் தேதி வரை பள்ளி கல்லுாரிகளுக்கும் அலுவலகங்களுக்கும் விடுமுறை அறிவிக்கப்பட்டிருந்தது. 

தமிழர் திருநாளை கருத்தில் வைத்து அனைத்து கல்வி நிறுவனங்களும் பாரபட்சமின்றி ஆசிரியர்கள், பணியாளர்கள், மாணவர்கள் என அனைவருக்கும் நான்கு நாட்கள் விடுமுறை வழங்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதனைக் கருத்தில் கொண்டு விடுமுறை அறிவித்துள்ள தமிழ்நாடு அரசு, வெளியூர் சென்றவர்கள் சொந்த ஊர்களுக்கு திரும்ப வசதியாக ஜனவரி 18ம் தேதியை பொது விடுமுறையாக  அறிவித்துள்ளது.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

2023 இந்த 6 ராசிகளுக்கு அதிர்ஷ்டம் அலைமோதும்! பயன்படுத்திக்கோங்க