குடை எடுத்திட்டு போங்க!! அடுத்த 3 நாட்களுக்கு லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு!!

 

தமிழகத்தில் அக்டோபர் 29ம் தேதி வடகிழக்கு பருவமழை தொடங்கி பரவலாக நல்ல மழை பெய்து வருகிறது. இதனால் தமிழகத்தின் பெரும்பாலான நீர்நிலைகள் நிரம்பியுள்ளன. இந்த மழை  ஜனவரி 6 வரை மழை  தொடரும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து வெளியிட்ட செய்திக்குறிப்பில் இன்று தமிழகத்தில் நிலவி வரும்  கிழக்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக,  தமிழக கடலோர மாவட்டங்கள், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். வடதமிழகத்தில்  அதிகாலை வேளையில் லேசான பனிமூட்டம் ஏற்படலாம்.  நாளையும், மறுநாளும் தமிழக கடலோர மாவட்டங்கள் மற்றும் அதனை ஒட்டிய மாவட்டங்கள், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் லேசானது முதல் மிதமான மழை பெய்யலாம். மற்ற  மாவட்டங்களில் வறண்ட வானிலையே நிலவும். 


ஜனவரி 6 மற்றும் 7ம் தேதிகளில் தென் தமிழகம்,  டெல்டா மற்றும் அதனை ஒட்டிய மாவட்டங்களில் லேசானது முதல் மிதமானது வரை  மழை பெய்யக்கூடும். 
சென்னையை பொறுத்தவரை சென்னை மற்றும் அதன் புறநகர் பகுதிகளில் அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்யலாம். காலை வேளைகளில் பனிமூட்டம் அதிகமாக இருக்கும்.

மார்கழி மாத விரத முறைகள், வழிபாடு, பலன்கள்!

அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

சபரிமலை போறீங்களா?! 60 நாட்களுக்கு உணவு, தங்குமிடம் எல்லாமே இங்கே ஃப்ரீ தான்!!