தலைக்குப்புற கவிழ்ந்த பேருந்து! 10க்கும் மேற்பட்டோர் காயம்!!
செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் அருகே அரசு பேருந்து சாலையில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 10க்கும் மேற்பட்ட பயணிகள் காயம் அடைந்தனர். சென்னையில் இருந்து பயணிகளை ஏற்றிக்கொண்டு திருச்சி நோக்கி அரசு பேருந்து ஒன்று சென்று கொண்டிருந்தது.
இந்நிலையில் பேருந்து கருங்குழி அருகே வந்துக் கொண்டிருந்தபோது ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்து நிலை தடுமாறி சாலை தடுப்பின் மீது மோதியது. இதில் பேருந்து சாலையில் தலைக்குப்புற கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் பேருந்தில் பயணித்த பயணிகளில் 10க்கும் மேற்பட்ட பயணிகள் காயம் அடைந்துள்ளனர்.
பின்னர் விபத்து குறித்து தகவல் அறிந்து வந்த போலீசார் காயமடைந்தவர்களை மீட்டு அங்குள்ள மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அதிர்ஷ்டவசமாக இந்த விபத்தில் எந்தவித உயிர்சேதமும் ஏற்படவில்லை. மேலும் விபத்து தொடர்பாக வழக்கு பதிவு செய்த போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். அரசு பேருந்து சாலையில் கவிழ்ந்து விபத்துக்குள்ளான சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சபரிமலை போறீங்களா?! 60 நாட்களுக்கு உணவு, தங்குமிடம் எல்லாமே இங்கே ஃப்ரீ தான்!!
அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!
மப்பேறி தள்ளாடும் நாய்!! மதுவை குடித்ததால் பரிதாபம்!!