35 பயணிகளை விட்டுவிட்டு சென்ற விமானம்!! பதறித் துடித்த விமானப் பயணிகள்!!

 

கடந்த சில நாட்களுக்கு முன் பெங்களூருவிலிருந்து டெல்லி செல்லும் விமானம் 56 பயணிகளை விட்டுவிட்டு அவர்களின் லக்கேஜ்களை மற்றும் ஏற்றிச்சென்றது. இது குறித்து விமான போக்குவரத்து துறை அமைச்சகம் விசாரணைக்கு உத்தரவிட்டிருந்தது. அதன்பிறகு விமானிகளிடம் மன்னிப்பு கேட்ட விமான நிர்வாகம் அடுத்த 12 மாதங்களுக்கு உள்ளூர் விமானப்பயணம் இலவசம் என்ற அறிவிப்பை வெளியிட்டது.சமீபகாலமாக  விமானப் பயணங்களில்  பல வகையான அட்ராசிட்டி அமர்க்களங்கள் அரங்கேறி வருகின்றன .

போதையில் அருகில் இருந்த சக பெண் பயணி மீது சிறுநீர் கழித்தது, நடுவானில்  பயணிகள் கட்டிப்புரண்டு சண்டை,  சிறுமியிடம் இளைஞர் அத்துமீறல் என நடந்து வருகின்றன. இதே போல் மற்றொரு சம்பவம் நடைபெற்றுள்ளது. அதன்படி அமிர்தசரசில் இருந்து சிங்கப்பூர் செல்லும் ஸ்கூட் ஏர்லைன்ஸ் விமானம் திட்டமிடப்பட்ட நேரத்திற்கு முன்பே 35 பயணிகளை விட்டு விட்டு சென்றது. அமிர்தசரஸ் விமான நிலையத்திலிருந்து நேற்று இரவு 7.55 மணிக்கு புறப்பட இருந்த ஸ்கூட் ஏர்லைன்ஸ் விமானம், மாலை 3 மணிக்கே புறப்பட்டது. இதனால் காத்திருந்த பயணிகள் மிகவும் ஆத்திரமடைந்தனர்.

விமான நிலையம் முழுவதும் பெரும் பரபரப்பு நிலவியது.  இது குறித்து  விமான நிலைய அதிகாரிகள், விமான நிறுவன அதிகாரிகளை தொடர்பு கொண்ட போது விமானம் புறப்படும் நேரம் மாற்றப்பட்டது குறித்து மின்னஞ்சல் மூலம் பயணிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டதாக விளக்கம் அளித்தனர். ஆனால் 30க்கும் மேற்பட்டோர் ஒரு குழுவாக சேர்ந்து விமான டிக்கெட்டுகளை முன்பதிவு செய்திருந்தனர். விமான நேர மாற்றம் குறித்து அந்த பயணிகளுக்கு தெரிவிக்கவில்லை எனவும் மாற்றப்பட்ட நேரத்திற்கு விமான நிலையத்திற்கு வந்த பயணிகளுடன் விமானம் புறப்பட்டுச் சென்றது எனவும்  விமான நிலைய அதிகாரி ஒருவர் தெரிவித்தார். இது குறித்து  ஸ்கூட் ஏர்லைன்ஸ் மற்றும் அமிர்தசரஸ் விமான நிலையம் இருவரும் விளக்கம் அளிக்க வேண்டும் என விமான நிலைய இயக்க்நரகம் அறிவித்துள்ளது. 

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

சபரிமலை போறீங்களா?! 60 நாட்களுக்கு உணவு, தங்குமிடம் எல்லாமே இங்கே ஃப்ரீ தான்!