முதல்வரின் தங்கை விடுவிப்பு! பரபரக்கும் அரசியல்!

 

மொத்த இந்தியாவும் பரபரத்து கொண்டிருந்தது. ஆந்திர முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டியின் தங்கை ஒய்.எஸ்.ஷர்மிளாவை காரோடு கிரேன் வைத்து போராட்டம் நடத்தியதற்காக தூக்கி சென்றது பெரும் அதிர்வலையை ஏற்படுத்திய நிலையில், முதல்வரின் தங்கை விடுவிக்கப்பட்டிருக்கிறார்.

போராட்டம் நடத்தியதற்காக ஒய்.எஸ்.ஆர் தெலுங்கானா கட்சி தலைவர் ஒய்.எஸ்.ஷர்மிளாவை காரில் இருந்தபடி கிரேன் மூலம் போலீசார் இழுத்துச் சென்றனர். இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. தொண்டர்கள் கிரேன் பின்னாலேயே சென்றனர். 

ஆந்திர முதல்வர் ஜெகன் மோகன் சகோதரியுமான ஒய்.எஸ்.ஷர்மிளா கடந்த ஆண்டு ஒய்எஸ்ஆர் தெலுங்கானா கட்சியைத் தொடங்கினார். இதையடுத்து தனது கட்சியை விரிவுபடுத்தும் விதமாக, அவர் தெலுங்கானாவில் பாத யாத்திரை மேற்கொண்டுள்ளார்.

இந்நிலையில், நேற்று முன்தினம் தெலுங்கானா மாநிலம் வாரங்கல் பகுதியில் நடைபயணம் சென்றபோது, ஒய்.எஸ்.ஆர் தெலுங்கானா கட்சி நிர்வாகிகளுக்கும், தெலுங்கானா ராஷ்டிரிய சமிதி கட்சி நிர்வாகிகளுக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. அப்போது, ஷர்மிளா மற்றும் அவரது ஆதரவாளர்கள் போலீசார் கைது செய்யப்பட்டனர்.

நேற்று காலை முதல்வர் சந்திரசேகர் ராவ் வீடு அமைந்துள்ள பிரகதி பவன் முன்பு ஷர்மிளா மற்றும் அவரது கட்சி நிர்வாகிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களை கைது செய்த போலீசார், அங்கிருந்த ஷர்மிளாவின் காரை அகற்ற முயன்றனர். உடனே ஷர்மிளா தனது காரின் உள்ளே சென்று அமர்ந்தார்.

காவல்துறை அதிகாரிகள் அவரை காரில் இருந்து வெளியேறும்படி கூறினர். ஆனால் ஷர்மிளா காரில் இருந்து வெளியேறாததால், அவரது காரை கிரேன் மூலம் இழுத்துச் சென்றனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

ஒய்.எஸ்.ஆர் தெலுங்கானா கட்சி நிர்வாகிகள் போலீசாருக்கு எதிராக கோஷமிட்டபடி ஷர்மிளாவின் காரின் பின்னால் சென்றனர். பின்னர் ஷர்மிளாவை கைது செய்த போலீசார், ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் கட்சியின் நடைபயணத்திற்கு தற்காலிமாக தடை விதித்தனர்.

சபரிமலை போறீங்களா?! 60 நாட்களுக்கு உணவு, தங்குமிடம் எல்லாமே இங்கே ஃப்ரீ தான்!!

அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

மப்பேறி தள்ளாடும் நாய்!! மதுவை குடித்ததால் பரிதாபம்!!