தொடரும் சோகம்!! ஜேஇஇ தேர்வில் தோல்வி அடைந்ததால் மாணவன் விடுதியில் தூக்கிட்டு தற்கொலை!!

 

பள்ளி, கல்லூரிகளில் படிக்கும் மாணவர்கள் மன அழுத்தம் காரணமாக தற்கொலை செய்து கொள்வது தொடர் கதையாகி வருகிறது. ராஜஸ்தானில்  பொறியியல் தேர்வுக்கு விடுதியில் தங்கி படித்துக் கொண்டிருந்த மாணவன் ஒருவன் விடுதியில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டான் .இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியையும் , சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது. இந்த மாணவன் பொறியியல் படிக்க தயார் செய்து வரும் நிலையில் கடந்த ஆண்டு நடத்தப்பட்ட ஜேஇஇ மெயின் தேர்வில் தோல்வி அடைந்தான்.  

அதன் பிறகு விடுதி அமைந்திருக்கும் பகுதியிலேயே ஒரு பயிற்சி நிறுவனத்தில் சேர்ந்து படித்து வந்தார். ஆனால் கடந்த ஒரு மாத காலமாக பயிற்சி வகுப்புக்களுக்கு செல்லவில்லை என பயிற்சி தலைமையாளர் தெரிவித்துள்ளார். நேற்று முழுவதும் அவரது அறையின் கதவு திறக்கப்படவே இல்லை இதனால் சந்தேகமடைந்த விடுதி காப்பாளர் காவல்துறைக்கு தகவல் தெரிவித்தார். இந்த தகவலின் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல்துறையினர் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தபோது மின்விசிறியில் தூக்கில் தொங்கிய நிலையில் இருந்தான். அவரது அறையை சோதனை செய்த போலீசார் தற்கொலை குறித்து எதுவும் கிடைக்கவில்லை. இதனால் மாணவரின் தற்கொலைக்கான  காரணம் குறித்து தகவல் எதுவும் வெளியிடப்படவில்லை. 


மேலும், மாணவன் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர். கடந்த 2022ல் மட்டும் பொறியியல் மற்றும் மருத்துவ நுழைவுத் தேர்வுகளுக்கு மாணவர்களைத் தயார்செய்யும்  மாணவர்கள் 15 பேர் தற்கொலை செய்து கொண்டனர் என்பது  குறிப்பிடத்தக்கது.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

சபரிமலை போறீங்களா?! 60 நாட்களுக்கு உணவு, தங்குமிடம் எல்லாமே இங்கே ஃப்ரீ தான்!