பலவிதமான கஷ்டங்கள்!! கண்ணீர் விட்டு கதறி அழுத நடிகை சமந்தா!!

 

நடிகை சமந்தா சில மாதங்களுக்கு முன் மயோசிடிஸ் என்கிற அரியவகை தோல்நோயால் பாதிக்கப்பட்டு இருந்தார். இதனால் அவர் கடந்த 4 மாதங்களாக எந்த படப்பிடிப்பிலும் கலந்துகொள்ளவில்லை.  யசோதா திரைப்படம் ரிலீஸ் ஆனபோது  பேட்டி அளித்திருந்தார். அந்த பேட்டியிலும் தாம் அந்த நோயால் கஷ்டப்பட்டு விட்டதாக கண்ணீர் விட்டார்.பேட்டியில் நடிகை சமந்தா கண்ணீர் விட்டதை கண்டு அவரது ரசிகர்கள் மிகவும் மனமுடைந்து விட்டனர்.

<a href=https://youtube.com/embed/66Kv0TdXYyk?autoplay=1&mute=1><img src=https://img.youtube.com/vi/66Kv0TdXYyk/hqdefault.jpg alt=""><span><div class="youtube_play"></div></span></a>" style="border: 0px; overflow: hidden"" title="Shaakuntalam Official Trailer - Telugu | Samantha, Dev Mohan | Gunasekhar | Feb 17, 2023 Release" width="703">

தொடர் சிகிச்சையில் இருந்து வந்த நடிகை சமந்தா புத்தாண்டுக்கு பின்னர் புத்துணர்ச்சியுடன் தமது பணிகளை செய்யத் தொடங்கிவிட்டதாக கூறினார். அதே நேரத்தில்  கடந்த சில தினங்களுக்கு முன்னர் மும்பை விமான நிலையத்தில் இருந்த  சமந்தாவின் புகைப்படங்கள் வெளியாகின.இந்நிலையில், இன்று  சாகுந்தலம் திரைப்படத்தின் டிரெயிலர் வெளியீட்டு விழா நடைபெற்றது.நீண்ட காலத்திற்கு பிறகு சமந்தா கலந்து கொள்ளும் நிகழ்ச்சி இதுதான் என்பதால் அவரது ரசிகர்கள் உற்சாகத்துடன் அவருக்கு வரவேற்பு அளித்தனர். 


இந்நிகழ்ச்சியில் பேசிய இப்படத்தின் இயக்குனர் குணசேகர், இந்த படத்தின் உண்மையான ஹீரோ சமந்தா தான் எனக் கூறினார். இயக்குநரின் பேச்சை கேட்டுக் கொண்டிருந்த நடிகை சமந்தா, கண்ணீர் விட்டு கதறி அழுதார். சாகுந்தலா கதாபாத்திரத்திற்கு பலரை நடிக்க வைக்க முயற்சி செய்ததாகவும், இறுதியில் தயாரிப்பாளர் நீலிமா தான் சமந்தாவை பரிந்துரை செய்ததாகவும் இயக்குநர்  குணசேகர் தெரிவித்தார்.

சமந்தா பேசிய போது “இந்த தருணத்திற்காக மட்டுமே நான் பல நாட்களாக தவம் இருந்தேன்.எதிர்பார்த்தபடி ரிலீசாக போகிறது. சாகுந்தலம் படத்திற்கு பலவிதமான கஷ்டங்கள். ஆனால் எத்தனை கஷ்டங்களை சந்தித்தாலும் சினிமா மீதான காதலை நான் இழக்கவில்லை” என கூறினார். 

மார்கழி மாத விரத முறைகள், வழிபாடு, பலன்கள்!

அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

சபரிமலை போறீங்களா?! 60 நாட்களுக்கு உணவு, தங்குமிடம் எல்லாமே இங்கே ஃப்ரீ தான்!!