வீடியோ!! மணமேடையில் மணப்பெண் மாரடைப்பால் மரணம்!! திருமண வீடு துக்கவீடாக மாறிய சோகம்!!

 

இன்றைய இளையதலைமுறையினர் ஆரோக்கியத்தில் பெரும் அக்கறை காட்டுவதே இல்லை. எந்நேரமும் பொழுதுபோக்கு ஓய்ந்த நேரங்களில் சாப்பாடு தூக்கம். இவை தான் அவர்களின் வாழ்க்கை முறை. உடல் உழைப்பு என்பது சிறிதும் இல்லாத வாழ்வு. இதனால் மிக சின்னஞ்சிறு வயதிலேயே ஏதாவது உடல்நலக்குறைபாட்டால் பாதிக்கப்படுவதும், மாரடைப்புக்களால் பலியாவதும் தொடர்கதையாகி வருகிறது.

அப்படி ஒரு சோக சம்பவம் உத்திரபிரதேசத்தில் நடைபெற்றுள்ளது.  உத்திரபிரதேசம்  மாநிலத்தில்  உள்ள லக்னோ, பத்வானா கிராமத்தை சேர்ந்தவர் ராஜ்பால் சர்மா. இவரின் மகள் 21 வயது ஷிவாங்கி ஷர்மா. 

புத்தேஸ்வர் மொஹலா பகுதியை சேர்ந்தவர் விவேக். ஷிவாங்கி ஷர்மாவுக்கும் - விவேக்கிற்கும் திருமணம் செய்ய பெற்றோர்களால் நிச்சயிக்கப்பட்டு, கடந்த வெள்ளிக்கிழமை  அன்று திருமணம் நடைபெற்றுள்ளது. திருமணத்தின் போது மணமக்கள் மாலை மாற்றும் நிகழ்வு நடைபெற்றுக் கொண்டிருந்தது. அப்போது ஷிவாங்கி ஷர்மா திடீரென  தன்னிலை மறந்து இருக்கையில் அமர்ந்தவாறு மயங்கி விழுந்தார். இதனைக்கண்டு அதிர்ச்சியடைந்த இருதரப்பு குடும்பத்தினரும், அவரை மீட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர்.

மருத்துவமனையில் ஷிவாங்கியை பரிசோதனை செய்த மருத்துவர்கள், அவர் மாரடைப்பால் உயிரிழந்துவிட்டதாக தெரிவித்தனர். இதனால் அதிர்ச்சியடைந்த திருமண வீட்டார் பெரும்  சோகத்தில் மூழ்கினர்.  இதுத்குறித்து தகவல் அறிந்து வந்த காவல் துறையினர், ஷிவாங்கி ஷர்மாவின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். முதற்கட்ட விசாரணையில் அவர் கடந்த சில நாட்களாகவே உடல்நலக்குறைவால் அவதிப்பட்டு வந்தது தெரியவந்தது.  

மணப்பெண் ஷிவாங்கி  கடந்த 15-20 நாட்களாக உடல்நிலை சரியில்லாமல் இருந்து வந்துள்ளார். அந்த சமயத்தில்  அவளுக்கு குறைந்த ரத்த அழுத்தமும் இருந்து சிகிச்சை பெற்று வந்துள்ளார். சில வாரங்களுக்கு முன்பு மருத்துவமனையில் மருந்து கொடுக்கப்பட்டு, ரத்த அழுத்தம் சமநிலை பெற்றதும்  வீட்டிற்கு அழைத்துச் செல்லப்பட்டார். ஆனால் திருமணத்தின்போது மீண்டும் ரத்த அழுத்தம் குறைந்து மாரடைப்பு ஏற்பட்டிருக்கலாம் என  மருத்துவ வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

சபரிமலை போறீங்களா?! 60 நாட்களுக்கு உணவு, தங்குமிடம் எல்லாமே இங்கே ஃப்ரீ தான்!!

அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

மப்பேறி தள்ளாடும் நாய்!! மதுவை குடித்ததால் பரிதாபம்!!