வீடியோ!! புலியுடன் செல்பி எடுத்ததால் சர்ச்சையில் சிக்கிய பிரபல நடிகை!!
பாலிவுட் திரையுலகில் முண்ணனி நடிகைகளில் ஒருவர் நடிகை ரவீனா தாண்டன். இவர் பெரிய திரையில் மட்டுமால்ல தொலைக்காட்சி நிகழ்ச்சிகள், தொடர்களிலும் நடித்து வருகிறார். இவர் நவம்பர் 22ம் தேதி மத்தியபிரதேச மாநிலம் நர்மதாபுரத்தில் சத்புரா புலிகள் காப்பகத்திற்கு சுற்றுலா சென்றுள்ளார். அங்குள்ள வனப்பகுதியில் புலிகள் நடமாட்டம் உள்ள பகுதிக்கு நடிகை ரவீனா வனத்துறை வாகனத்தில் சுற்றிப் பார்த்தார்.
மேலும், புலிக்கு மிகவும் அருகில் சென்று அதற்கு இடையூறு அளித்ததாகவும் கூறப்பட்டுள்ளது. மேலும் இச்சம்பவம் குறித்து சரியான விளக்கம் அளிக்கும்படி நடிகை ரவீனாவுடன் பயணித்த வனத்துறையில் பணிபுரியும் வாகன ஓட்டுனர், வனத்துறை அதிகாரிகளுக்கு வனத்துறை தரப்பில் நோட்டீஸ் அனுப்பட்டுள்ளது. இந்த விவகாரத்தில் நெருக்கடி அதிகரித்து வரும் நிலையில் தான் பயணித்தது வனத்துறையால் அங்கீகரிக்கப்பட்ட வாகனத்தில் மட்டுமே. சுற்றுலா வழிதடத்தை விட்டு மாறி வேறு இடத்திற்கு எங்கும் மாறிச் செல்லவில்லை என ரவீனா விளக்கம் அளித்துள்ளார். வனத்துறை சார்பில் அதிகாரிகள், ஊழியர்களிடையே தீவிர விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
சபரிமலை போறீங்களா?! 60 நாட்களுக்கு உணவு, தங்குமிடம் எல்லாமே இங்கே ஃப்ரீ தான்!!
அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!