வீடியோ! சுகாதாரத் துறை அமைச்சர் மீது துப்பாக்கி சூடு.. ரத்த வெள்ளத்தில் சரிந்த அமைச்சர்.. உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதி!

 

ஒடிசா மாநிலத்தின் சுகாதாரத் துறை அமைச்சர் நபா கிஷோர் தாஸ் மீது, காரில் சென்று கொண்டிருந்த போது மர்ம நபர்கள் துப்பாக்கிச் சூடு நடத்திய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த துப்பாக்கி சூட்டில், ரத்த வெள்ளத்தில் அமைச்சர் சரிந்து கீழே விழுந்தார். உயிருக்கு ஆபத்தான நிலையில், தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். 

ஒடிசா மாநிலத்தில் பிஜு ஜனதா தளம் கட்சியின் நவீன் பட்நாயக் தலைமையில் ஆட்சி நடைபெற்று வருகிறது. அவரது அமைச்சரவையில் சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சராக  பதவி வகித்து வருபவர் நபா கிஷோர் தாஸ்.


பிஜு ஜனதா தளம் கட்சியின் மூத்த தலைவரான கிஷோர் தாஸ், இன்று (ஜனவரி 29) மதியம் 12.30 மணிக்கு ஜார்சுகுடா மாவட்டத்தில் உள்ள பிரஜராஜ் நகருக்கு அருகே உள்ள காந்தி சவுக் பகுதிக்கு காரில் சென்று கொண்டிருந்தார். பின்னர், காரில் இருந்து இறங்கிய அவர் மீது மர்ம நபர்கள் 3 பேர் திடீரென சரமாரியாக துப்பாக்கியால் சுட்டு தள்ளினர். 2 ரவுண்டுகள் துப்பாக்கியால் சுட்டதாக தெரிகிறது.

சுகாதாரத் துறை அமைச்சர் நபா கிஷோர் தாஸ் மார்பை துப்பாக்கி குண்டுகள் துளைத்தன. இதில் சம்பவ இடத்திலேயே அவர் சுருண்டு கீழே விழுந்தார். இதை கண்டதும் அவரது ஆதரவாளர்கள் கடும் அதிர்ச்சி அடைந்தனர். அந்த பகுதியில் பதட்டமும் பரபரப்பும் ஏற்பட்டது. ரத்த வெள்ளத்தில் கீழே விழுந்த அமைச்சரை உடனடியாக அவரது ஆதரவாளர்கள் மருத்துவமனைக்கு தூக்கி சென்றனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அவரது உடல்நிலை கவலைக்கிடமாக இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

அமைச்சர் மீது துப்பாக்கி சூடு நிகழ்த்தப்பட்டதற்கு அவரது ஆதரவாளர்கள் கடும் ஆத்திரம் அடைந்தனர். பல்வேறு இடங்களில் போராட்டங்கள் வெடித்தன. போலீசாரின் தீவிர பாதுகாப்பை மீறி அமைச்சர் மீது துப்பாக்கி சூடு நடத்து இருப்பதால் சந்தேகம் எழுந்துள்ளது. இந்த தாக்குதல் திட்டமிட்ட சதியாக இருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது. இது தொடர்பாக போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள். துப்பாக்கி சூடு நடத்திய மர்ம நபர்களை தேடி வருகிறார்கள்.

இந்த துப்பாக்கிச் சூட்டிற்கு முதல்வர் நவீன் பட்நாயக் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள செய்தியில், நபா கிஷோர் தாஸ் மீதான துப்பாக்கிச் சூடு சம்பவம் அதிர்ச்சி அளிப்பதாகவும், இந்த சம்பவத்தை வன்மையாகக் கண்டிப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. நபா கிஷோர் தாஸ் விரைவாக குணமடைய பிரார்த்திப்பதாகத் தெரிவித்துள்ள முதல்வர், சம்பவம் குறித்து புலனாய்வு பிரிவு போலீசார் விசாரிக்க உத்தரவிட்டுள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார்.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்!