மறுபடியும் மொதல்..ல  இருந்தா?!  பொது இடங்களில் மாஸ்க், சமூக இடைவெளி  கட்டாயம்!! அதிரடி உத்தரவு!!

 

 கடந்த சில மாதங்களாக சீனாவில் மீண்டும் கொரோனா பரவல் அதிகரிக்க தொடங்கியுள்ளது. சீனா, அமெரிக்கா ,ஜப்பான் போன்ற நாடுகளில் கொரோனா தீவிரமடைந்து வருவதாகவும் மற்ற நாடுகள் தடுப்பு நடவடிக்கைகளை கடைப்பிடிக்கவும் உலக சுகாதார  மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.  இதன் அடிப்படையில் இந்தியா மாநில அரசுகளுக்கு  தேவையான மருந்துகள், தடுப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்தவும், அதனை உறுதி செய்யவும் அறிவுறுத்தியிருந்தது.

சீனாவை பொறுத்தவரை ஏற்கனவே கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்டவர்களையும் கொரோனா தாக்கியுள்ளது. உயிரிழப்பும் அதிகரித்து வருகிறது. கடந்த ஒரே வாரத்தில் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 60000க்கும் அதிகமாக இருந்ததாக சீன சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. இந்நிலையில்  கேரள அரசு இது குறித்து புதிய கட்டுப்பாடுகளையும், உத்தரவுகளை பிறப்பித்துள்ளது. அதன்படி  உலகின் பல்வேறு நாடுகளில் கொரோனா பாதிப்புக்கள் மீண்டும் அதிகரிக்க தொடங்கியுள்ளது.

இந்தியாவிலும் கொரோனா பாதிப்பு அதிகரிக்கக் கூடும் என தகவல்கள் வெளியாகியுள்ளன. இதன் அடிப்படையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கேரளாவிலும் கட்டுப்பாடுகள் விதிக்கப்படுகின்றன.
அதன் படி இன்று முதல் அமுலுக்கு வரும் புதிய கட்டுப்பாடுகள்:
 பொது இடங்களில் முகக் கவசம் அணிவது கட்டாயம். 
வாகனங்கள், அரசுப் பேருந்துகளில் செல்லும்போதும் அனைவருக்கும் மாஸ்க் அவசியம். 
பொது இடங்களில் சமூக இடைவெளி அவசியம். 
இந்த உத்தரவு ஒரு மாதத்திற்கு அமலில் இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

சபரிமலை போறீங்களா?! 60 நாட்களுக்கு உணவு, தங்குமிடம் எல்லாமே இங்கே ஃப்ரீ தான்!