வீடு முழுசும் கிரைண்டர், அண்டா, சைக்கிள்னு  பரிசுப் பொருட்கள்  !! என் மகன் உசுரோட  இல்லையே.!! அரவிந்த்ராஜனின்  தாய் கதறல்!!

 


பாலமேடு கிழக்குத்தெருவில் வசித்து வந்தவர் 25 வயது அரவிந்த் ராஜன். இவர் முதல் நான்கு சுற்றுக்களில் 9 காளைகளை  3 வது இடத்தை பிடித்தார். ஐந்தாவது சுற்றில் களமிறங்கிய போது, கொம்பால் வயிற்றை முட்டி குடல் சரிந்து கீழே விழுந்தார். உடனடியாக பாலமேடு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு மேல் சிகிச்சைக்காக அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

அங்கு பரிசோதனை செய்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக தெரிவித்தனர். அரவிந்த் ராஜன், பாலமேட்டில்  விவசாயி ராஜேந்திரன் - தெய்வானை தம்பதியின் 2வது மகன். இன்னும் திருமணம் ஆகவில்லை. இவர் சென்னையில் கட்டிட வேலை பார்த்து வந்தார்.  சென்னையில் பணிபுரிந்து வந்தாலும் பொங்கல் நேரத்தில்  சரியாக ஊருக்கு வந்து மாடுபிடித்து பயிற்சியை தொடங்குவார். ஒவ்வொரு வருடமும் பரிசுகளை தட்டிச் செல்வார். இந்த முறைதான் அதிகளவு காளைகளை அடக்கி பரிசை நோக்கி முன்னேறி வந்தார். 
பாலமேடு ஜல்லிக்கட்டில்அரவிந்த் ராஜன், ஒவ்வொரு சுற்றிலும் காளையை பிடித்ததால், தான் வென்ற பரிசை தாயாரிடம் கொடுத்து மகிழ்ச்சி தெரிவித்து வந்தார்.

10வது மாட்டை பிடிக்க முயன்ற போது தான்  வயிற்றில் வலதுபுறத்தில் மாடு குத்திவிட்டது. மகன் உயிரிழந்த செய்தி கேட்டு அவரின்  தாய் தெய்வானை, ‘‘என் மகன் பரிசாக வாங்கிய கிரைண்டர், அண்டா, சைக்கிள்  என வாங்கிய பரிசு பொருட்கள் வீடு முழுவதும் நிரம்பி கிடக்கிறது. ஆனால் என் மகன் இல்லையே...’’ என கூறி கதறி அழுதார். அரவிந்த் ராஜன் இறந்த சோகத்தால், கிழக்குத்தெரு பகுதி முழுவதும் பெரும் சோகத்தில் மூழ்கி இருந்தது.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

சபரிமலை போறீங்களா?! 60 நாட்களுக்கு உணவு, தங்குமிடம் எல்லாமே இங்கே ஃப்ரீ தான்!