105அடியில் உலகின் மிகப்பெரிய ஹாக்கி ஸ்டிக்!! சுதர்சன் பட்நாயக் அசத்தல் சாதனை!!

 

உலகக்கோப்பை ஹாக்கி போட்டிகள் ஒடிசாவில் ஜனவரி 13ம் தேதி வெள்ளிக்கிழமை தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. ஹாக்கி விளையாட்டை பெருமைப்படுத்தும் வகையில்  பிரபல மணல் சிற்ப கலைஞர் சுதர்சன் பட்நாயக் 5,000 ஹாக்கி பந்துகளை கொண்டு  மிகப்பெரிய ஹாக்கி ஸ்டிக் மணல் சிற்பம் ஒன்றை படைத்து புதிய உலக சாதனை  நிகழ்த்தியுள்ளார்.

இது குறித்து அவர் தெரிவிக்கையில்  ஹாக்கி உலகக் கோப்பை போட்டி தொடங்குவதற்கு முன்  ஜனவரி 10ம் தேதி 2 நாட்கள் இரவு, பகலுமாக 5 டன் மணல் மூலம் 105 அடி நீளம் கொண்ட 5000 ஹாக்கி பந்துகளைக் கொண்டு உலகின் மிகப்பெரிய ஹாக்கி ஸ்டிக் உருவாக்கப்பட்டுள்ளது.

இந்த  புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் பெரும் வைரலாகி வருகிறது.இந்த மிகப்பெரிய ஹாக்கி ஸ்டிக் மணல் சிற்பத்தில்  16 அணிகளை குறிக்கும் வகையில் 16 வகையான வண்ணங்கள் பயன்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.  மணல் சிற்ப கலைஞர் சுதர்சன் பட்நாயக்கிற்கு  வாழ்த்துக்களும், பாராட்டுக்களும் குவிந்து வருகின்றன. 

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

சபரிமலை போறீங்களா?! 60 நாட்களுக்கு உணவு, தங்குமிடம் எல்லாமே இங்கே ஃப்ரீ தான்!