ஒரே ஒரு தும்மலால் 12 வயது சிறுவன் தலையில் அடிபட்டு பலி... பெரும் சோகம்!
திருப்பத்தூர் மாவட்டம் நாட்றம்பள்ளி அருகே நடந்த விபத்து நெஞ்சை உலுக்கியது. இருசக்கர வாகனம் ஓட்டிச் சென்ற தந்தைக்கு திடீரென தும்மல் வந்ததால் வாகனம் கட்டுப்பாட்டை இழந்தது. சாலையோர மின்கம்பத்தில் மோதியதில் 12 வயது அஸ்வின் தலையில் பலத்த காயமடைந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். பெற்றோர் மற்றும் உடன் சென்ற சிறுவன் படுகாயமடைந்து அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
ஒரே நொடியில் நடந்த இந்த விபத்து, ஒரு குடும்பத்தின் வாழ்வையே புரட்டிப் போட்டது. தும்மல் போன்ற சாதாரண காரணமும் உயிரிழப்புக்கு வழிவகுக்கும் என்பதால் கிராமம் முழுவதும் அதிர்ச்சியில் உறைந்தது. போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதேபோல் தருமபுரி மாவட்டம் பாலக்கோடு அருகே மற்றொரு சாலை விபத்து சோகத்தை ஏற்படுத்தியது. இருசக்கர வாகனத்தில் சென்ற ராகுல், ஹரிநாத் ஆகிய இரு இளைஞர்கள் எதிரே வந்த ஆட்டோ பைக்கில் மோதினர். மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியிலேயே இருவரும் உயிரிழந்தனர். ஒரே நாளில் நடந்த இந்த இரு விபத்துகள், சாலை பாதுகாப்பு குறித்து மீண்டும் கேள்வி எழுப்பியுள்ளது.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!