undefined

கரும்புத் தோட்டத்தில் 13 வயது சிறுமி பலாத்காரம்... அடுத்தடுத்து காமூகன் வெறிச்செயல்!

 

சோலாப்பூர் மாவட்டம், கரமலா தாலுகாவில் உள்ள ஒரு கிராமத்தில் 13 வயது சிறுமி அடுத்தடுத்து பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பாதிக்கப்பட்ட சிறுமியின் பெற்றோர் கரும்பு வெட்டும் தொழிலாளர்கள். அவர்கள் கரும்புத் தோட்டத்தில் வேலையில் இருந்தபோது, 24 வயது மதிக்கத்தக்க ஒரு இளைஞன் அந்தச் சிறுமியைத் தனியாகப் பிடித்துக் கடத்திச் சென்றுள்ளான்.

சிறுமியை ஆள் நடமாட்டம் இல்லாத பகுதிக்குக் கொண்டு சென்று, அவரைக் கொலை செய்துவிடுவதாக மிரட்டிப் பாலியல் வன்கொடுமை செய்துள்ளான். நீண்ட நேரமாகச் சிறுமியைக் காணவில்லை என்பதால், பெற்றோர் மற்றும் சக தொழிலாளர்கள் தேடியபோது, சிறுமி மயங்கிய நிலையில் மீட்கப்பட்டார்.

உடனடியாகச் சிறுமி அருகில் உள்ள அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்குத் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. சிறுமியின் உடல்நிலை தற்போது சீராக இருப்பதாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. சிறுமியின் தந்தை அளித்த புகாரின் அடிப்படையில், கரமலா போலீசார் வழக்குப் பதிவு செய்து தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.

தலைமறைவாக இருந்த 24 வயது இளைஞனைப் போலீசார் சில மணி நேரங்களிலேயே மடக்கிப் பிடித்தனர். அவர் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும், கடத்தல் மற்றும் கொலை மிரட்டல் தொடர்பான பிரிவுகளும் சேர்க்கப்பட்டுள்ளன.

தொழிலாளர்களின் பாதுகாப்புக் குறித்துக் கேள்வி எழுப்பியுள்ள அப்பகுதி மக்கள், குற்றவாளிக்குக் கடுமையான தண்டனை வழங்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர். கரும்புத் தோட்டங்களில் வேலை செய்யும் தொழிலாளர்களின் குடும்பங்களுக்குப் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் எனச் சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!