வன்முறை பூமியாக மாறுகிறதா தமிழகம்? அடுத்தடுத்து அதிர்ச்சி... 16 வயது சிறுவனை அரிவாளால் வெட்டிய பள்ளி மாணவன்!

 

தமிழகத்தில் கல்லூரி மாணவி கடத்தி பலாத்காரம், பள்ளி மாணவி பலாத்கார படுகொலை, சிறுமி பலாத்காரம் என்று பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் அதிகரித்து வரும் நிலையில், வன்முறை கலாச்சாரமும் அதிகரித்து வருகிறது. வெட்டு, குத்து, கொலை என்று தினந்தோறும் தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும் ஏதோவொரு சம்பவம் பதிவாகிக் கொண்டிருக்கிறது. இந்நிலையில் பள்ளி மாணவன் ஒருவன் அரிவாளால் 16 வயது சிறுவனை வெட்டிய சம்பவம் பதற வைக்கிறது.

திருநெல்வேலி மாவட்டம் அம்பாசமுத்திரம் அருகே ந  மன்னார்கோவில் பகுதியைச் சேர்ந்த 16 வயது சிறுவன்   அதே பகுதியில் வசிக்கும் 11 ம் வகுப்பு மாணவனும் நண்பர்களாக பழகி வந்தனர்.   கடந்த சில நாட்களாக இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டதாக தெரிகிறது. இதனால் அவர்களிடையே பதற்றம் ஏற்பட்டதாக தெரிகிறது.

சம்பவத்தன்று இருவரும் மீண்டும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதில் ஆத்திரமடைந்த மாணவன் தன்னிடம் மறைத்து வைத்திருந்த அரிவாளை எடுத்ததாக கூறப்படுகிறது. பின்னர் அந்த சிறுவனை சரமாரியாக வெட்டியதாக தகவல் வெளியாகியுள்ளது. படுகாயம் அடைந்த சிறுவன் ரத்த வெள்ளத்தில் கீழே விழுந்து அலறி துடித்தான்.  

சிறுவனின்  அலறல் சத்தம் கேட்டு ஓடி வந்த அக்கம் பக்கத்தினர் சிறுவனை மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். முதலில் அம்பாசமுத்திரம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டது.  முதலுதவிக்கு பிறகு  காயம் தீவிரமாக இருந்ததால் நெல்லை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார். இச்சம்பவம் குறித்து காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து மாணவனை பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர். இளம் வயதினரிடையே அதிகரிக்கும் வன்முறை குறித்து அப்பகுதி மக்கள் கவலை தெரிவித்துள்ளனர். பள்ளிகளில் சமீபகாலமாக வன்முறை சம்பவங்கள் அரங்கேறி வருவது பெரும் கவலையை ஏற்படுத்துவதாக சமூக ஆர்வலர்கள் கூறுகின்றனர்.  

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!