undefined

231 ஆண்டுகால சாதனை முறியடிப்பு... வெறும் 40 ரன் இலக்கை தற்காத்து பாகிஸ்தான் டிவி அணி உலக சாதனை.. வீடியோ!

 

பாகிஸ்தானின் குவைத்-இ-அசாம் (Quaid-e-Azam) கோப்பைக்கான முதல்தர கிரிக்கெட் போட்டியில், பாகிஸ்தான் டெலிவிஷன் (PTV) மற்றும் சுய் நார்தர்ன் கேஸ் பைப்லைன் லிமிடெட் (SNGPL) அணிகள் மோதின. இந்த ஆட்டத்தில் யாரும் எதிர்பார்க்காத ஒரு அதிசயம் நிகழ்ந்துள்ளது.

முதல் இன்னிங்ஸில் முதலில் ஆடிய PTV அணி 166 ரன்களுக்கு ஆல்-அவுட் ஆனது. பதிலுக்கு ஆடிய SNGPL அணி 238 ரன்கள் குவித்து, 72 ரன்கள் முன்னிலை பெற்றது. இரண்டாவது இன்னிங்ஸைத் தொடர்ந்த PTV அணி, வெறும் 111 ரன்களுக்குச் சுருண்டது. இதனால் SNGPL அணியின் வெற்றிக்கு வெறும் 40 ரன்கள் மட்டுமே இலக்காக நிர்ணயிக்கப்பட்டது.


40 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற மிக எளிய இலக்குடன் களம் இறங்கிய SNGPL அணி, PTV அணியின் பந்துவீச்சை எதிர்கொள்ள முடியாமல் திணறியது. அலி உஸ்மான் (6 விக்கெட்) மற்றும் அமத் பட் (4 விக்கெட்) ஆகியோரின் துல்லியமான பந்துவீச்சால், SNGPL அணி வெறும் 37 ரன்களுக்கு ஆல்-அவுட் ஆனது. இதன் மூலம் PTV அணி 3 ரன்கள் வித்தியாசத்தில் ஒரு வரலாற்று வெற்றியைப் பதிவு செய்தது.

இதற்கு முன்னதாக, 1794-ஆம் ஆண்டு லார்ட்ஸ் மைதானத்தில் நடைபெற்ற போட்டியில், ஓல்ட்ஃபீல்டு (Oldfield) அணி 41 ரன்கள் என்ற இலக்கைப் பாதுகாத்து, MCC அணியை 34 ரன்களுக்குச் சுருட்டியதே உலக சாதனையாக இருந்தது. தற்போது 231 ஆண்டுகளுக்குப் பிறகு 40 ரன்கள் இலக்கைப் பாதுகாத்து பாகிஸ்தான் அணி அந்தச் சாதனையை முறியடித்துள்ளது.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!