undefined

 சிறுத்தை தாக்கி 5 வயது சிறுவன் பரிதாப பலி...

 
 

குஜராத்தின் அம்ரேலி மாவட்டத்தில் சிறுத்தை தாக்கியதில் 5 வயது சிறுவன் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ஞாயிற்றுக்கிழமை காலை தாயின் பின்னால் நடந்துச் சென்ற சிறுவனை, பண்ணையில் மறைந்திருந்த சிறுத்தை திடீரென இழுத்துச் சென்றதாக வனத்துறை தெரிவித்துள்ளது.

பலத்த காயங்களுடன் மீட்கப்பட்ட சிறுவன் சாஹில் கடாரா அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். ஆனால் சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்ததாக மருத்துவர்கள் அறிவித்தனர். இந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

சிறுத்தையைப் பிடிக்க வனத்துறை தீவிர நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளது. மூன்று கூண்டுகள் அமைக்கப்பட்டு, வன அதிகாரிகள் தொடர்ந்து ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர். கடந்த நவம்பர் மாதமும் இதே மாவட்டத்தில் சிறுத்தை தாக்குதலில் ஒரு வயது குழந்தை உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!