சபரிமலையில் கதறியழுத செளமியா அன்புமணி... 50 ஆண்டு வேண்டுதல் நிறைவேறியது!
சபரிமலையில் கதறியழுதபடியே உருக்கமாக ஐயப்பனை தரிசித்தார் பாஜக செளமியா அன்புமணி. ஏறக்குறைய 50 ஆண்டு கால வேண்டுதலை நிறைவேற்றினார்.
கார்த்திகை மற்றும் மார்கழி மாதங்கள் மட்டுமின்றி அனைத்து மலையாள மாதத்தின் முதல் ஐந்து நாட்களிலும் சபரிமலை ஐயப்பன் கோவிலில் பக்தர்கள் வழிபாடு செய்து வருகின்றனர்.
அப்போதும் மாலை அணிந்து இருமுடி கட்டி பதினெட்டாம்படி ஏறி ஐயப்பனை தரிசனம் செய்து வருகின்றனர். அந்த வகையில் பசுமை தாயகம் தலைவரான சௌமியா அன்புமணி சபரிமலை ஐயப்பன் கோவிலுக்கு மாலை அணிந்து விரதம் இருந்து இருமுடி கட்டி வழிபாடு செய்துள்ளார்.
பசுமைத் தாயகம் அமைப்பின் தலைவர் மட்டுமின்றி தமிழகத்தின் முக்கிய அரசியல் கட்சிகளில் ஒன்றான பாட்டாளி மக்கள் கட்சயின் தலைவர் அன்புமணி ராமதாஸின் மனைவியுமான செளமியா அன்புமணி சமூக ஆர்வலராகவும் உள்ளார். பெண்களுக்காகவும் பெண்களின் பாதுகாப்புக்காகவும் அவ்வப்போது குரல் கொடுத்து வருகிறார்.
கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியில் பாமக இடம்பெற்றிருந்தது. அப்போது பாமக சார்பில் தருமபுரி தொகுதியில் சவுமியா அன்புமணி போட்டியிட்டார். ஆனால் சொற்ப வாக்குகள் வித்தியாசத்தில் அவர் தோல்வியை தழுவினார்.
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!