விவாகரத்துக்குப் பதில் வினோத முடிவு... கணவனை 'வாடகைக்கு' விட்ட மனைவி!
தாய்லாந்தில் திருமண உறவில் ஏற்பட்ட விரிசலை ஒரு பெண் கையாண்ட விதம் சர்வதேச அளவில் பேசுபொருளாகியுள்ளது. தனது கணவன் வேறொரு பெண்ணுடன் ரகசியத் தொடர்பு வைத்திருப்பதை அறிந்த அந்தப் பெண், வழக்கமான விவாகரத்து அல்லது சண்டைகளில் ஈடுபடாமல் ஒரு வினோதமான வணிகத் திட்டத்தை முன்னெடுத்தார். தனது கணவனின் கள்ளக்காதலியிடமே ஒரு பேச்சுவார்த்தையை நடத்திய அவர், மாதம் 30,000 பாட் (இந்திய மதிப்பில் சுமார் 85,000 ரூபாய்) தனக்கு வாடகையாகக் கொடுத்தால், தனது கணவனை அவளுடனேயே இருக்க அனுமதிப்பதாகத் தெரிவித்துள்ளார்.
கணவனின் துரோகத்தால் மனமுடைந்த அந்தப் பெண், விவாகரத்து பெற்றுத் தனியாகப் போராடுவதை விட, இதன் மூலம் கிடைக்கும் வருமானத்தைக் கொண்டு தனது குழந்தைகளின் எதிர்காலத்தையும் தனது வாழ்க்கையையும் கவனித்துக் கொள்ளலாம் என்று கருதியுள்ளார். இதற்காக முறைப்படி ஒரு 'லீஸ்' ஒப்பந்தம் (Rental Agreement) தயார் செய்யவும் அவர் முயன்றது பலரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது. இந்தச் செய்தி சமூக வலைதளங்களில் பரவியதைத் தொடர்ந்து, "துரோகத்தைக் கூட ஒரு தொழிலாக மாற்ற முடியுமா?" என்று இணையவாசிகள் விவாதங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.
இருப்பினும், இந்த வினோத ஒப்பந்தத்திற்கு அந்தப் பெண்ணின் கணவன் சம்மதம் தெரிவிக்காததால், தற்போது இந்த விவகாரம் அங்குள்ள நீதிமன்றம் வரை சென்றுள்ளது. சட்டப்படி ஒரு மனிதரை இவ்வாறு வாடகைக்கு விட முடியுமா என்ற கேள்வியும் எழுந்துள்ளது. கணவன் - மனைவி உறவில் இத்தகைய ஒரு 'டீல்' பேசப்பட்டது தாய்லாந்து மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அந்தப் பெண் தற்போது தனது கணவரிடம் இருந்து நஷ்டஈடு பெறுவதற்கான சட்டப்பூர்வ நடவடிக்கைகளில் இறங்கியுள்ளார்.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!