மொட்டைத் தலையுடன் மணமேடை ஏறிய மணமகள்... வைரல் வீடியோ!
இந்தியத் திருமணங்கள் என்றாலே கனமான பட்டுச் சேலைகளும், பூக்கள் சூடிய நீண்ட கூந்தல் அலங்காரங்களுமே நம் நினைவுக்கு வரும். ஆனால், இந்த மரபுகளை உடைத்து, எந்தவிதத் தயக்கமும் இன்றி மொட்டைத் தலையுடன் மணமேடை ஏறி ஒட்டுமொத்த தேசத்தின் கவனத்தையும் ஈர்த்துள்ளார் மணமகள் மஹிமா காய். ஒரு பெண்ணின் அழகு அவளது கூந்தலில் தான் இருக்கிறது என்று நம்பும் சமூகத்தில், மஹிமாவின் இந்த முடிவு பெரும் புரட்சியாகப் பார்க்கப்படுகிறது.
மஹிமா காய்க்கு சிறுவயதிலேயே ‘அலோபீசியா’ (Alopecia) எனப்படும் முடி உதிர்தல் பாதிப்பு ஏற்பட்டது. இதனால் ஏற்பட்ட மன உளைச்சல், சமூகத்தின் கேலிப் பேச்சுகள் எனப் பல வலிகளை அவர் கடந்து வந்துள்ளார். தனது திருமண நாளிலாவது செயற்கை முடி (Wig) அணிந்து தன்னை அழகாகக் காட்டிக்கொள்ள வேண்டும் என்று அவர் நினைக்கவில்லை. மாறாக, தான் எப்படி இருக்கிறாரோ அப்படியே உலகிற்குத் தெரிய வேண்டும் என்பதில் உறுதியாக இருந்து, புன்னகையோடு மணமேடை ஏறி அங்கிருந்தவர்களை வியப்பில் ஆழ்த்தினார்.
இது குறித்து மஹிமா கூறுகையில், "இது ஒரு எதிர்ப்பல்ல, எனக்கான விடுதலை. மற்றவர்களின் எதிர்பார்ப்புக்காக என்னை நான் மாற்றிக்கொள்ள விரும்பவில்லை" என உருக்கமாகத் தெரிவித்துள்ளார். இவரது திருமணப் புகைப்படங்கள் தற்போது இணையதளங்களில் காட்டுத்தீயாகப் பரவி வருகின்றன. "முடி என்பது வெறும் உறுப்புதான், அது ஒரு பெண்ணின் ஆளுமையைத் தீர்மானிக்காது" என்பதை நிரூபித்துள்ள மஹிமாவிற்குப் பாராட்டுகள் குவிந்து வருகின்றன.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!