undefined

பேருந்து  தடுப்பு சுவரில் மோதி 10 பேர் படுகாயம்... பொங்கலுக்கு சொந்த ஊர் சென்ற போது பெரும் சோகம்! 

 
 

பொங்கல் பண்டிகையையொட்டி கூடுதல் பேருந்துகள் இயக்கப்படும் நிலையில், இன்று காலை சென்னை–தஞ்சாவூர் சென்ற தனியார் பேருந்து விபத்தில் சிக்கியது. புதுச்சேரி காலாப்பட்டு அருகே சென்றபோது, ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த பேருந்து தடுப்பு கட்டை மீது மோதி தலைக்குப்புற கவிழ்ந்தது. திடீரென ஏற்பட்ட விபத்தால் தூக்கக் கலக்கத்தில் இருந்த பயணிகள் அலறியடித்தனர்.

இந்த விபத்தில் பேருந்தில் பயணம் செய்த 10-க்கும் மேற்பட்ட பயணிகள் படுகாயம் அடைந்தனர். தகவல் அறிந்த போலீஸார் மற்றும் தீயணைப்பு துறையினர் உடனடியாக சம்பவ இடத்துக்கு சென்று மீட்பு பணியில் ஈடுபட்டனர். உயிருக்கு போராடிய பயணிகள் அருகில் உள்ள தனியார் மருத்துவமனைகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

இதுகுறித்து போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். முதல் கட்ட விசாரணையில், ஓட்டுநர் தூக்கக் கலக்கத்தில் இருந்ததே விபத்துக்குக் காரணம் என தெரிய வந்துள்ளது. பண்டிகை காலங்களில் ஓட்டுநர்களின் கவனக்குறைவு விபத்துகளை ஏற்படுத்தும் அபாயம் அதிகரிப்பதாக கூறப்படுகிறது.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!