undefined

கொரோனாவில்  14 கோடி இழப்பு… ரேபிடோ ஓட்டுநரான தொழிலதிபர் !

 
 

கோவிட் தொற்றுநோய்க்குப் பிறகு வாழ்க்கை புரட்டிப்போட்ட ஒருவரின் கதை சமூக வலைதளங்களில் கவனம் ஈர்த்து வருகிறது. X தளத்தில் சிராக் என்பவர் பகிர்ந்த பதிவில், ஒரு சாதாரண ரேபிடோ பயணம் மனதை உலுக்கும் அனுபவமாக மாறியதாக தெரிவித்துள்ளார். “வாழ்க்கை ரொம்ப நியாயமற்றது” என்ற அந்த ஓட்டுநரின் வார்த்தைகள் அவரை ஆழமாக பாதித்ததாகவும் கூறியுள்ளார்.

அமிட்டியில் ஹோட்டல் மேலாண்மை படித்த அந்த ஓட்டுநர், ஒருகாலத்தில் வசதியான வாழ்க்கை வாழ்ந்ததாக சிராக்கிடம் மனம் திறந்து பேசியுள்ளார். ராணுவத்தில் பணியாற்றிய தந்தை, வெற்றிகரமான குடும்ப தொழில், கவலையற்ற நாட்கள் என எல்லாம் நன்றாக இருந்தது. ஆனால் கோவிட் வந்ததும் நிலைமை தலைகீழானது. குடும்பம் ரூ.13 முதல் 14 கோடி வரை இழந்ததாகவும், மீண்டும் தொடங்கிய முயற்சியும் தோல்வியடைந்து சேமிப்புகள் அனைத்தும் கரைந்துவிட்டதாகவும் தெரிவித்துள்ளார்.

இறுதியில் கையில் இருந்தது பைக் மட்டுமே என்பதால் ரேபிடோ ஓட்டுநராக வேலை செய்யத் தொடங்கியதாக அவர் கூறியுள்ளார். சோர்வாக இருந்தாலும் கைவிடவில்லை என்றும், கடவுளை நம்பி இன்னொரு முயற்சி செய்யப் போவதாகவும் சொன்னபோது அவர் அழுததாக சிராக் பதிவிட்டுள்ளார். இந்த கதை வைரலாகி, கோவிட் எத்தனை குடும்பங்களின் வாழ்க்கையை நிரந்தரமாக மாற்றியது, திடீர் சரிவுகளுக்குப் பிறகும் மனிதர்கள் எவ்வாறு மீண்டும் எழ முயற்சிக்கிறார்கள் என்ற விவாதத்தை எழுப்பியுள்ளது.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!