கிணற்றுக்குள் பாய்ந்த கார்...    ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 9 பேர் பலி... பகீர் வீடியோ!

 

 

மகாராஷ்டிரா மாநிலம் நாசிக் மாவட்டத்தில், ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 9 பேர் கார் விபத்தில் நீரில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் அந்த மாநிலத்தையே உலுக்கியுள்ளது. திண்டோரி அருகே நள்ளிரவு நேரத்தில் தனியார் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்றுவிட்டு, மகிழ்ச்சியுடன் வீடு திரும்பிக் கொண்டிருந்தபோது இந்த கோர விபத்து நிகழ்ந்துள்ளது.

தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த மீட்புக் குழுவினர், நீண்ட போராட்டத்திற்குப் பிறகு கிரேன் உதவியுடன் காரையும், உயிரிழந்தவர்களின் உடல்களையும் மீட்டனர். "ஒரே வீட்டில் 9 பிணங்கள்" என்ற செய்தி அந்தப் பகுதியையே நிலைகுலைய வைத்துள்ளது. மகிழ்ச்சியாகச் சென்ற பயணம், இப்படி ஒரு சுடுகாட்டுப் பயணமாக முடியும் என்று அந்தக் குடும்பத்தினர் கனவிலும் நினைத்திருக்க மாட்டார்கள். தற்போது இது குறித்துப் போலீசார் வழக்குப் பதிவு செய்து, விபத்துக்கான காரணம் குறித்துத் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். ஒரு சிறிய கவனக்குறைவு ஒரு மொத்த குடும்பத்தையே அழித்திருப்பது அப்பகுதி மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!