undefined

 உலகக்கோப்பை வென்ற   ஒவ்வொரு வீராங்கனைக்கும் கார் பரிசு...! 

 
 

13-வது ஐ.சி.சி. மகளிர் ஒருநாள் உலகக்கோப்பை தொடரில் ஹர்மன்பிரீத் கவுர் தலைமையிலான இந்திய அணி, தென் ஆப்பிரிக்காவை 52 ரன் வித்தியாசத்தில் வீழ்த்தி சாம்பியன் பட்டம் வென்றது. முதல்முறையாக உலகக்கோப்பையை கைப்பற்றிய இந்திய மகளிர் அணிக்கு நாடு முழுவதும் பாராட்டுகள் குவிந்தன. பிரதமர், ஜனாதிபதி நேரில் சந்தித்து வீராங்கனைகளை உற்சாகப்படுத்தினர்.

வெற்றியைத் தொடர்ந்து வீராங்கனைகளுக்கு கோடிக்கணக்கில் பரிசு மழை கொட்டியது. மத்திய, மாநில அரசுகள் சார்பிலும் பல்வேறு அறிவிப்புகள் வெளியானது. இந்த நிலையில், இந்திய மகளிர் அணிக்கு கார் பரிசளிக்கப்படும் என்று டாட்டா மோட்டார்ஸ் நிறுவனம் அறிவித்தது.

அதன்படி மும்பையில் நடைபெற்ற பாராட்டு விழாவில், இந்திய அணியில் இடம் பெற்ற ஒவ்வொரு வீராங்கனைகளுக்கும் டாட்டா சியாரா கார் பரிசாக வழங்கப்பட்டது. இந்த நிகழ்ச்சி வீராங்கனைகளுக்கு மேலும் உற்சாகத்தை அளித்தது. இந்திய மகளிர் கிரிக்கெட்டின் புதிய பொற்காலம் தொடங்கியுள்ளதாக ரசிகர்கள் மகிழ்ச்சியுடன் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!