undefined

   மதில் சுவர் இடிந்து விழுந்து  2 சிறுமிகள் பரிதாபப் பலி....

 
 

விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே கொங்கலாபுரத்தில் ராஜாமணி–ராஜேஸ்வரி தம்பதி வசித்து வந்தனர். இவர்களின் 9 வயது மகள் கமலிகா, வீட்டின் கேட் அருகே விளையாடிக் கொண்டிருந்தார். அதே நேரத்தில் ராஜேஸ்வரியின் தங்கை தனலட்சுமியின் 4 வயது மகள் ரிஷிகாவும் அருகில் விளையாடினார்.

அப்போது திடீரென வீட்டின் மதில் சுவர் இடிந்து விழுந்தது. இதில் கமலிகா மற்றும் ரிஷிகா இருவரும் பலத்த காயமடைந்தனர். மீட்க முயன்றபோதும், இருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.

நான்கு ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்ட வீட்டின் கேட் சுவர் சேதமடைந்த நிலையில் இருந்ததாக கூறப்படுகிறது. அதுவே விபத்துக்குக் காரணம் என சந்தேகிக்கப்படுகிறது. விளையாட்டாக தொடங்கிய நிமிடங்கள், உயிரிழப்பாக முடிந்தது அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!