undefined

அமைச்சர் காரின்  குறுக்கே வந்த நாய்... அடுத்தடுத்து மோதிய வாகனங்கள்... பெரும் பரபரப்பு !

 

உத்தர பிரதேச மாநில மீன்வளத்துறை அமைச்சர் சஞ்சய் நிஷாத், இன்று ஒரு பயங்கர கார் விபத்தில் சிக்கி நூலிழையில் உயிர் தப்பினார். கோரக்பூரில் உள்ள தனது இல்லத்திலிருந்து ஆக்ரா நோக்கி அரசு காரில் அவர் புறப்பட்டுச் சென்றார். கார் நெடுஞ்சாலையில் அதிவேகமாகச் சென்று கொண்டிருந்தபோது, எதிர்பாராத விதமாக ஒரு நாய் திடீரென சாலையின் குறுக்கே பாய்ந்துள்ளது.

நாயின் மீது மோதிவிடக் கூடாது என்பதற்காக, காரின் ஓட்டுநர் ஸ்டீயரிங்கைத் திடீரெனத் திருப்பிக் காரை நிறுத்த முயன்றுள்ளார். அப்போது பின்னால் மின்னல் வேகத்தில் வந்த மற்றொரு கார், அமைச்சரின் கார் மீது பயங்கரமாக மோதியது. இந்த விபத்தில் காரின் பின்பகுதி சுக்குநூறாகச் சேதமடைந்தது. இருப்பினும், காரின் உள்ளே இருந்த அமைச்சர் சஞ்சய் நிஷாத் எவ்வித காயமுமின்றி அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார்.

தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார், அமைச்சரைப் பத்திரமாக மீட்டு வேறு வாகனத்தில் அனுப்பி வைத்தனர். விபத்து குறித்து வழக்குப் பதிவு செய்துள்ள போலீசார், இது தொடர்பாகத் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். நாய் குறுக்கே வந்ததால் அடுத்தடுத்து கார்கள் மோதிக்கொண்ட இந்தச் சம்பவம் அந்தப் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

 

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!