விபத்தில் சிக்கிய பிரபல பாலிவுட் நடிகை...
பாலிவுட் நடிகை நோரா ஃபதேஹி, மும்பையில் நேற்று மதியம் நடந்த கார் விபத்தில் சிக்கினார். அந்தேரி மேற்கு லிங்க் ரோடில், ‘சன்பர்ன்’ இசை நிகழ்ச்சிக்கு காரில் சென்றபோது, மது போதையில் அதிவேகமாக வந்த கார் மோதி விபத்து ஏற்பட்டது. பயங்கர மோதலில் நோரா காருக்குள் ஒரு பக்கம் இருந்து மறுபக்கம் தூக்கி எறியப்பட்டார்.
இந்த விபத்தில் நோராவின் தலை கார் ஜன்னலில் பலமாக மோதியது. தலையில் லேசான காயம் ஏற்பட்ட நிலையில், அதிர்ஷ்டவசமாக அவர் உயிர் தப்பினார். உடனடியாக மருத்துவ சிகிச்சை அளிக்கப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதுகுறித்து இன்ஸ்டாகிராமில் வீடியோ வெளியிட்ட நோரா, “என் வாழ்க்கை முடிந்துவிடும் என நினைத்தேன்” என்று வேதனையுடன் கூறினார். 2025-ஆம் ஆண்டிலும் மது அருந்தி வாகனம் ஓட்டுவது வருத்தமளிக்கிறது என்றும், தயவுசெய்து குடித்துவிட்டு ஓட்டாதீர்கள் என்றும் வேண்டுகோள் விடுத்தார். விபத்தை ஏற்படுத்திய வினய் சக்பால் (27) என்பவரை மும்பை போலீசார் கைது செய்துள்ளனர்.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!