undefined

 நெல்லையில் பரபரப்பு... 8ம் வகுப்பு மாணவனை அரிவாளால் வெட்டிய  சக மாணவன்!  

 
 


தமிழகத்தில் திருநெல்வேலி மாவட்டம் பாளையங்கோட்டையில் செயல்பட்டு வரும்  தனியார் பள்ளியில் 8 ம் வகுப்பு மாணவனை  அரிவாளால் சக மாணவன் வெட்டினான். இதனையடுத்து காவல் நிலையத்தில் சரண் அடைந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

திருநெல்வேலி மாவட்டம் பாளையங்கோட்டையில் பிரபல தனியார் பள்ளி செயல்பட்டு  வருகிறது. இந்த பள்ளியில் நூற்றுக்கணக்கான மாணவர்கள் கல்வி படித்து  வருகின்றன. இந்நிலையில், பள்ளி வளாகத்தில் 8ம் வகுப்பில்  இரு மாணவர்களிடையே திடீர் மோதல் ஏற்பட்டுள்ளது. இந்த மோதலில் ஒருவருக்கு அரிவாள் வெட்டு விழுந்தது. 

அரிவாளால் வெட்டியதில் படுகாயமடைந்த மாணவர் மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டு உள்ளார். சக மாணவனை வெட்டிய 8ம் வகுப்பு மாணவன் அரிவாளுடன் காவல் நிலையத்தில் சரணடைந்தார். சம்பவத்தில்  மாணவனை தடுக்கச் சென்ற ஆசிரியருக்கும் சிறிய காயம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இச்சம்பவம் குறித்து  போலீசார் வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். 

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க நட்சத்திரத்துக்கு லாபம் தரும் துறை எது?