undefined

  கால்பந்து அரையிறுதி போட்டியில் மைதானத்தில்    சண்டை...  வைரலாகும் வீடியோ!  

 

பாகிஸ்தானில் நடந்த நேஷன்ஸ் கேம்ஸ் கால்பந்து அரையிறுதியில், போட்டி முடிந்த சில நிமிடங்களில் மைதானமே பரபரப்பாக மாறியது. பாகிஸ்தான் ஆர்மி அணி – டபிள்யூஏபிடிஏ அணிகளுக்கிடையே நடந்த மோதல், திடீரென்று சண்டையாக வெடித்து, ஒருவரையொருவர் தாக்கிக் கொண்ட காட்சிகள் சமூக வலைதளங்களில் தீபாவளி போல பரவி வைரலானது. 4-3 என வெற்றி பெற்ற ஆர்மி அணிக்கு எதிராக, பெனால்டி தீர்ப்புக்கு கோபமடைந்த வாப்டா வீரர்கள் நடுவரையும் துரத்திச் செல்லும் காட்சிகள் அதிர்ச்சியை ஏற்படுத்தின.

இதைத் தொடர்ந்து பாகிஸ்தான் ஒலிம்பிக் அசோசியேஷன், சண்டையைத் தொடங்கியவர்கள் யார் என்பதற்கான தனிப்பட்ட விசாரணை நடத்தப் போவதாக அறிவித்துள்ளது. தவறு செய்த வீரர்கள், பயிற்சியாளர்கள் மீது கடும் ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் பாகிஸ்தான் விளையாட்டு வாரியம் எச்சரித்துள்ளது. மைதானத்தில் விளையாட்டு உச்சக்கட்டமாக இருந்தாலும், போட்டிக்குப் பிறகு ஏற்பட்ட இந்தக் காட்சிகள் விளையாட்டு ஒழுக்கத்துக்கே கேள்விக்குறி எழுப்பியுள்ளன

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!