படப்பிடிப்பில் தீ விபத்து! நடிகையின் கை,கால், முகத்தில் 35 சதவிகிதம் தீக்காயம்! மருத்துவமனையில் அனுமதி!

 

வங்கதேசத்தைச் சேர்ந்த இளம்நடிகை ஷர்மீன், படப்பிடிப்பில் ஏற்பட்ட திடீர் தீ விபத்தில் காயமடைந்த நிலையில், சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

கடந்த 2018ல் வெளியான ‘சின்சியர்லி யுவர்ஸ்’ படத்தின் மூலமாக அறிமுகமான ஷர்மீன் அகீ (27), ‘டாக்கா’, ‘பைஷே ஸ்ரபோன்’ மற்றும் ‘பாண்டினி’ போன்ற படங்களில் நடித்ததன் மூலம் வங்கதேச மொழி திரைப்பட ரசிகர்களிடையே பிரபலமடைந்தார். குறுகிய காலத்தில் வங்க மொழி திரையுலகில் பிரபலமான நடிகையாகவும் வலம் வந்தார். 

இந்நிலையில், ஷர்மீன் புதிதாக நடித்து வரும் படத்தின் படப்பிடிப்பு மிர்பூர் பகுதியில் நடைபெற்று வந்தது. அப்போது ஷர்மீன் இருந்த மேக்கப் அறையில் திடீரென தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த தீ விபத்தில் சிக்கிய அவருக்கு கை, கால்கள், மற்றும் முகத்தில் தீக்காயம் ஏற்பட்டுள்ளது. அவரை மீட்டப் படக்குழுவினர் மருத்துவமனையில் சேர்த்தனர்.

அப்போது அவரை பரிசோதித்த போது 35 சதவீதம் தீக்காயம் ஏற்பட்டுள்ளதாக தெரிவித்தனர். இதையடுத்து அவர் மேல் சிகிச்சைக்காக ஷேக் ஹசீனா நேஷனல் இன்ஸ்டிடியூட் ஆப் பர்ன் அண்ட் பிளாஸ்டிக் சர்ஜரியின் பிரிவுக்கு மாற்றப்பட்டார். அங்கு அவருக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

தற்போது அவர் உடல் நலம் சீராக உள்ளதாகவும், அவரது ரத்தத்தில் பிளாஸ்மா எண்ணிக்கை குறைந்துள்ளதால், பிளாஸ்மா சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது என மருத்துவர்கள் தெரிவித்தள்ளனர். இந்த சம்பவம் குறித்து போலிஸார் விசாரணை நடத்தி வருகின்றனர். முதற்கட்ட விசாரணையில் படப்பிடிப்பு தளத்தில் ஷார்ட் சர்க்யூட் ஏற்பட்டதால் இந்த தீ விபத்து ஏற்பட்டுள்ளது என தெரியவந்துள்ளது.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

2023 இந்த 6 ராசிகளுக்கு அதிர்ஷ்டம் அலைமோதும்! பயன்படுத்திக்கோங்க

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்