பட்டாசு ஆலை வெடித்து சிதறி 4 பேர் படுகாயம்!
மேற்கு வங்காள மாநிலம் தெற்கு பர்கானஸ் மாவட்டம் சம்பஹிதி கிராமத்தில் உள்ள பட்டாசு ஆலையில் இன்று மதியம் திடீரென பயங்கர வெடி விபத்து ஏற்பட்டது. எதிர்பாராத இந்த வெடியில் ஆலையின் ஒரு பகுதி சேதமடைந்தது. அப்பகுதி முழுவதும் புகை மற்றும் சத்தம் காரணமாக பரபரப்பு ஏற்பட்டது.
இந்த விபத்தில் பட்டாசு ஆலையில் வேலை செய்து கொண்டிருந்த 4 பேர் படுகாயமடைந்தனர். தகவல் கிடைத்ததும் தீயணைப்புத்துறையினரும் போலீசாரும் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். காயமடைந்தவர்களை மீட்டு அருகிலுள்ள மருத்துவமனையில் அனுமதித்தனர்.
தற்போது காயமடைந்தவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. வெடி விபத்து எதனால் ஏற்பட்டது என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். பாதுகாப்பு விதிமுறைகள் பின்பற்றப்பட்டதா என்பதும் ஆய்வு செய்யப்படுகிறது.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!