undefined

மணமக்களுக்கு ரூ.1 லட்சம் மதிப்பிலான கரன்சி மாலை... கெத்து காட்டிய தாய்மாமன்கள்!

 

ராமநாதபுரத்தில் இன்று பிப்ரவரி 22ம் தேதி காலை நடைபெற்ற ஒரு திருமணத்தில், மணமக்களின் தாய்மாமன்கள் செய்த இந்தச் செயல் அங்கிருந்த உறவினர்களையும் பொதுமக்களையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியது.

தமிழர்களின் பாரம்பரிய முறைப்படி திருமணத்தில் தாய்மாமன்களின் சீர் வரிசை முக்கியத்துவம் வாய்ந்தது. அந்த வகையில், இந்தத் திருமணத்தில் மணமக்களின் தாய்மாமன்கள் தங்களது பாசத்தை வெளிப்படுத்தும் விதமாக ஒரு லட்சம் ரூபாய் மதிப்பிலான நோட்டுகளைக் கோர்த்து பெரிய மாலைகளாகத் தயார் செய்திருந்தனர். திருமணம் முடிந்து மணமக்கள் மண்டபத்தை விட்டு வெளியே வந்தபோது, அவர்களுக்கு இந்தப் பணமாலைகளை அணிவித்து உற்சாகமாக வரவேற்றனர்.

கழுத்து நிறையப் பூமாலைகளுக்கு நடுவே, பளபளக்கும் கரன்சி நோட்டுகளால் ஆன மாலையை அணிந்துகொண்டு மணமக்கள் ஊர்வலமாக வந்தபோது, அந்த வழியாகச் சென்ற பொதுமக்கள் வியப்புடன் நின்று பார்த்தனர்.

இந்தக் காட்சிகள் தற்போது இணையதளங்களில் வேகமாகப் பரவி வருகின்றன. சிலர் இது தாய்மாமன்களின் பாசத்தைக் காட்டுவதாகப் பாராட்டினாலும், பொது இடங்களில் இவ்வளவு பணத்தைக் கொண்டு செல்வது பாதுகாப்பு ரீதியாகச் சரியா என்ற விவாதமும் எழுந்துள்ளது. எது எப்படியோ, ராமநாதபுரம் திருமண வீட்டுப் பணமாலை விவகாரம் தான் இன்றைய வைரல் ஹிட்!

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!