"சாமானியர்களுக்கும் அதிகாரமளித்த நாயகன்!" - எம்.ஜி.ஆருக்கு விஜய் புகழாரம்!
தமிழக அரசியலில் புதிய சக்தியாக உருவெடுத்துள்ள தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) தலைவர் விஜய், புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆரின் பிறந்தநாளை முன்னிட்டுத் தனது எக்ஸ் (X) தளத்தில் ஒரு முக்கியப் பதிவை வெளியிட்டுள்ளார். எம்.ஜி.ஆரை "தமிழக மக்களின் நெஞ்சங்களில் பொன்மனச் செம்மலாக, ஏழை எளியோருக்கான நலத்திட்டங்களின் நாயகராக" விஜய் வர்ணித்துள்ளார்.
பேரறிஞர் அண்ணா வகுத்த ஜனநாயகப் பாதையில் நின்று, சாமானிய மக்களுக்கும் அதிகாரத்தைப் பகிர்ந்தளித்து மக்களாட்சி செய்தவர் எம்.ஜி.ஆர் என்று அவர் குறிப்பிட்டுள்ளார். எம்.ஜி.ஆரின் 109-வது பிறந்தநாளில், அவருக்குத் தனது நெஞ்சம் நிறைந்த "புகழ் வணக்கத்தை" விஜய் செலுத்தியுள்ளார்.
நடிகர் விஜய் தனது அரசியல் பயணத்தைத் தொடங்கியதில் இருந்து, எம்.ஜி.ஆரின் மக்கள் செல்வாக்கையும் அவரது அரசியல் பாணியையும் ஒரு முன்னுதாரணமாகக் கொண்டு செயல்பட்டு வருவதாக அரசியல் நோக்கர்கள் கருதுகின்றனர். விஜய்யின் இந்த வாழ்த்துச் செய்தி அதிமுக தொண்டர்கள் மற்றும் தவெக தொண்டர்களிடையே ஒருமித்த வரவேற்பைப் பெற்றுள்ளது. குறிப்பாக, எம்.ஜி.ஆரின் பிறந்தநாளை ஒட்டி விஜய் இத்தகைய கருத்தைப் பதிவிட்டது, அவர் சாமானிய மக்களுக்கான அரசியலை முன்னெடுப்பதைக் குறிப்பதாகக் கருதப்படுகிறது.
தமிழகத்தில் 2026-ல் நடைபெற உள்ள சட்டமன்றத் தேர்தலுக்குத் தவெக தயாராகி வரும் நிலையில், திராவிட இயக்கத்தின் முக்கியத் தூண்களில் ஒருவரான எம்.ஜி.ஆரைப் புகழ்ந்து விஜய் பதிவிட்டது கவனிக்கத்தக்கது.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!