undefined

கோர விபத்து... கார் - சுற்றுலா வேன் மோதி ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 பேர் பலி; 18  பேர் படுகாயம்!

 

தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே தேவதானப்பட்டி பகுதியில் நிகழ்ந்த பயங்கர சாலை விபத்தில், கேரளாவைச் சேர்ந்த ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். சுற்றுலா வேனில் இருந்த 18 பேர் படுகாயமடைந்தனர்.

கேரள மாநிலம் கோட்டயம் மாவட்டம் குறவிலங்காடு பகுதியைச் சேர்ந்த ஒரு குடும்பத்தினர், காரில் தேனி நோக்கி வந்து கொண்டிருந்தனர். அதிகாலை சுமார் 3 மணி அளவில், தேனி - பெரியகுளம் எல்லையில் உள்ள காட்ரோடு பகுதியில் கார் வந்து கொண்டிருந்தது. அப்போது தேனியிலிருந்து ஏற்காடு நோக்கிச் சுற்றுலாப் பயணிகளுடன் சென்ற வேன் ஒன்று, காரின் மீது எதிர்பாராத விதமாக நேருக்கு நேர் மோதியது. இந்த மோதல் மிகக் கடுமையாக இருந்ததால், கார் முற்றிலும் அப்பளம் போல் நொறுங்கியது. இந்த விபத்தில் காரில் பயணம் செய்த 4 பேரில், ஜேன் தாமஸ் (34), சோனிமோன் (43), மற்றும் ஜோபிஷ் தாமஸ் (34). ஆகிய 3 பேர் சம்பவ இடத்திலேயே இடிபாடுகளுக்குள் சிக்கி உயிரிழந்தனர்.

காரில் இருந்த ஷாஜி என்பவர் பலத்த காயங்களுடன் உயிருக்கு ஆபத்தான நிலையில் தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இவர்கள் அனைவரும் ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் என முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. சுற்றுலா வேனில் பயணம் செய்த 18 பயணிகள் படுகாயமடைந்தனர். அவர்கள் அனைவரும் வத்தலகுண்டு, பெரியகுளம் மற்றும் தேனி அரசு மருத்துவமனைகளில் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். விபத்து நடந்தவுடன் வேன் சாலையில் கவிழ்ந்ததால் மீட்புப் பணியில் தாமதம் ஏற்பட்டது.

சம்பவ இடத்திற்கு சென்ற தேவதானப்பட்டி போலீசார், இடிபாடுகளுக்குள் சிக்கியிருந்தவர்களை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அதிகாலை நேரத்தில் ஏற்பட்ட கடும் பனிமூட்டம் அல்லது ஓட்டுநரின் கவனக்குறைவு விபத்திற்குக் காரணமாக இருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது. இது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!