282 அடி உயர கோபுரத்தின் உச்சியில் உயிருக்கு ஆபத்தான சாகசம்... வைரல் வீடியோ!
ஹரியானா மாநில ஹிசாரில் உள்ள 282 அடி உயரமுள்ள ஜிண்டால் கோபுரத்தின் உச்சியில் மோனு என்ற இளைஞர் பாதுகாப்பு இல்லாமல் ஆபத்தான சாகசங்களில் ஈடுபட்டார். அந்த வீடியோ இணையத்தில் வெளியாகி, பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த ஞாயிற்றுக்கிழமை, பாதுகாப்பு வளையங்களை மீறி கோபுரத்தின் உச்சிக்குச் சென்ற மோனு, விளிம்பில் நின்று தலைகீழாக நிற்கும், கைகளால் தொங்கும் போன்ற ஆபத்தான செயல்களைச் செய்தார். அருகே வைத்த மதுபாட்டில்கள் இதை இன்னும் ஆபத்தானதாக மாற்றியது. இதை பார்த்த கோபுர ஊழியர்கள் அவரை கைது செய்து காவல்துறைக்கு ஒப்படைத்தனர்.
விசாரணையில் தவறை ஒப்புக்கொண்ட அவர் மன்னிப்பு கேட்டதால், காவல்துறையினர் அறிவுரைகள் வழங்கி விடுவித்தனர். சமூக வலைதளங்களில் புகழ் பெறுவதற்காக இளஞர் உயிருக்கு ஆபத்து ஏற்படுத்திய இந்த செயல் பொதுமக்களிடையே கடும் கண்டனத்தை ஏற்படுத்தியுள்ளது.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!