மகள்களுக்காக யோகா கற்ற தாய்.. ஏழ்மையிலும் பதக்கங்களை குவித்த சகோதரிகள்!

 

காஞ்சிபுரம் திருக்காலிமேடு பகுதியில் ஹைதர் அலி- ஷாகிரா தம்பதியர் வசித்து வந்தனர். மிகவும் ஏழ்மை குடும்பத்தை சேர்ந்த இவர்களுக்கு இரண்டு மகள்கள், ஒரு மகன் உள்ளனர். மூத்த மகள் பெயர் ரேஷ்மா (21) இளைய மகளின் பெயர் கரிஷ்மா (18) மகன் லியாகத் அலி (10).

கடந்த சில ஆண்டுகளுக்கு முன் யோகா கற்க வேண்டும் என்ற ஆர்வம் இந்த இரு மகள்களுக்கும் வந்துள்ளது. அவர்களின் குடும்ப வழக்கப்படி திருமணம் ஆகாத பிள்ளைக்களை இது போன்ற பயிற்சிக்கு அனுப்பமாட்டார்களாம். எனினும் தனது மகள்களுக்கு யோகா கற்றுக்கொடுக்க, தாயார் ஷாகிரா யோகா கலை பயின்று அதில் பட்டப் படிப்பு முடித்துள்ளார். தற்பொழுது இவர்களுக்கு பயிற்சி அளித்து வருகிறார்.

ஆசிரியரான அன்னையின் பயிற்சியில் யோகா கலையை முழுவதும் கற்று தேர்ந்தனர் ரேஷ்மா மற்றும் கரிஷ்மா. இதனையடுத்து தங்கள் சாதனை பயணத்தை தொடங்கியுள்ளனர். ரேஷ்மா, கரிஷ்மா ஆகிய இருவரும் மாவட்ட, மாநில மற்றும் தேசிய அளவிலான போட்டிகளில் 300க்கும் மேற்பட்ட பதக்கங்களை வென்று சாதனை படைத்துள்ளனர். 

அதேநேரம் யோகா ஆசிரியரான தாயும் இன்னொரு புறம் பரிசுகளை வாங்கி குவித்து வருகிறார். ஏழ்மையிலும் சாதிக்கும் இந்த குடும்பத்தினருக்கு பல்வேறு தரப்பினரும் பாராட்டு தெரிவித்து வருகின்றனர். மேலும் சர்வதேச அளவில் பதக்கங்கள் பெற்று இந்தியாவுக்கு பெருமை சேர்ப்பார்கள் என்பதால் அரசு உதவவும் கோரிக்கை எழுந்துள்ளது.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

2023 இந்த 6 ராசிகளுக்கு அதிர்ஷ்டம் அலைமோதும்! பயன்படுத்திக்கோங்க

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்