undefined

சன்ரூஃப்பில் முளைத்த பனை மரம்…   வைரல் வீடியோ!

 

கேரளாவின் பிஸியான சாலையில் ஓடிய கார் ஒன்று இணையத்தில் செம்ம வைரலாகி வருகிறது. மஞ்சள் நிற டாட்டா சியரா காரின் சன்ரூஃப் வழியாக சிறிய பனை மரம் ஒன்று வெளியே நீட்டிக்கொண்டிருந்தது. பார்ப்பதற்கு கார் மேலே மரம் முளைத்தது போலவே காட்சி அளித்தது.

வாகன நெரிசலில் சிக்கியிருந்த அந்த கார் மெதுவாக நகர்ந்தபோது இந்த காட்சி பலரின் கவனத்தை ஈர்த்தது. சன்ரூஃப்பின் உண்மையான பயன்பாட்டை இப்போதுதான் புரிந்துகொண்டோம் என்று நெட்டிசன்கள் நகைச்சுவையாக பதிவிட்டனர். இந்த வீடியோ இதுவரை 27 லட்சத்திற்கும் அதிகமான பார்வைகளை பெற்றுள்ளது.

அதே நேரத்தில் சமூக ஆர்வலர்கள் எச்சரிக்கையும் விடுத்துள்ளனர். கடந்த ஆண்டு பெங்களூருவில் சன்ரூஃப் வழியாக வெளியே நின்ற சிறுவன் விபத்தில் சிக்கிய சம்பவத்தை அவர்கள் நினைவுபடுத்தினர். சன்ரூஃப் காற்றோட்டத்திற்காக மட்டுமே பயன்படுத்த வேண்டும் என்றும் பாதுகாப்பு அவசியம் என்றும் அறிவுறுத்தியுள்ளனர்.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!