undefined

சாலையில் அச்சமின்றி உலாவித் திரியும் சிவப்பு நரி… வைரல் வீடியோ!

 
 

லடாக்கின் பாங்காங் ஏரிக்கு அருகே, இமயமலை சிவப்பு நரி ஒன்று சாலையோரம் அச்சமின்றி உலா வரும் வீடியோ சமூக வலைதளங்களில் கவனம் பெற்றுள்ளது. மனிதர்களைக் கண்டால் விலகிச் செல்லும் வனவிலங்கு, வாகனங்களுக்கு அருகில் காத்திருப்பது யாரோ ஒருவர் அதற்கு உணவளித்திருப்பதையே காட்டுகிறது என இந்திய வனப்பணி அதிகாரி பர்வீன் கஸ்வான் எச்சரிக்கை விடுத்துள்ளார். இது வனவிலங்குகளுக்கு ஆபத்தான முன்னறிவிப்பாகும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

வனவிலங்குகளுக்கு உணவளிப்பது அவற்றின் இயல்பான வேட்டையாடும் திறனை மழுங்கச் செய்து, மனிதர்களைச் சார்ந்து வாழும் நிலையை உருவாக்குகிறது. இதனால் உணவைத் தேடி சாலைகளுக்கு வரும் விலங்குகள் அதிவேக வாகனங்களில் மோதி உயிரிழக்கும் அபாயம் அதிகரிக்கிறது. குடியிருப்புகளுக்குள் நுழையும் சூழலும் உருவாகி, மனிதர்–விலங்கு மோதல்களும் அதிகரிக்கின்றன.

சுற்றுச்சூழல் சமநிலையைப் பேணுவதில் சிவப்பு நரிகள் முக்கிய பங்கு வகிக்கின்றன. குறிப்பாக எலிகளின் எண்ணிக்கையை கட்டுப்படுத்தும் இவ்விலங்குகளுக்கு மனிதர்களின் தவறான பரிதாபம் பெரும் பாதிப்பை ஏற்படுத்தும் என நிபுணர்கள் கூறுகின்றனர். அழகான காட்சியாகத் தோன்றினாலும், அதன் பின்னால் இருக்கும் ஆபத்தை உணர்ந்து, வனவிலங்குகளின் இயல்பை மதிக்க வேண்டும் என வனத்துறை வலியுறுத்தியுள்ளது.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!