ஜாமீனில் வெளியே வந்த ரவுடி அடித்தே கொலை !
சேலம் மாவட்டம், இடங்கணசாலை அருகே கே. கே. நகர் பகுதியை சேர்ந்த 25 வயது கௌதம் கடந்த ஏப்ரல் மாதம் வாக்குவாதத்தில் தனது அண்ணனை கட்டையால் தாக்கி கொலை செய்த நிலையில் முன்னாள் வழக்குகளில் சிக்கியவர். இந்த சம்பவத்துக்குப் பிறகு போலீசார் கௌதத்தை கைது செய்து சிறையில் அடைத்தனர்.
கௌதம் கடந்த இரண்டாம் தேதி நிபந்தனை ஜாமீனில் வெளியே வந்தார். தினந்தோறும் மகுடஞ்சாவடி காவல் நிலையத்தில் கையெழுத்திட வேண்டிய விதியை பின்பற்றி வந்தார். ஆனால் கடந்த நவம்பர் 6 ஆம் தேதி, காவல் நிலையத்திற்கு சென்று கையெழுத்திட்ட பிறகு, இரவு வீடு திரும்பவில்லை. அதிர்ச்சியடைந்த பெற்றோர் போலீசாருக்கு தகவல் அளித்தனர்.
போலீசார் தேடிப் பார்த்த போது, இரும்பாலை அருகே சிட்டனூர் பகுதியை ஒட்டிய சொந்த நிலத்தில் கௌதம் தலையின்றி கொலை செய்யப்பட்டு கிடந்தார். போலீசார் தலையைச் சேர்த்து பிரேத பரிசோதனைக்கு அனுப்பினர். சம்பவத்தில் தொடர்பு கொண்ட நண்பர்கள் 22 வயது தனுஷ் மற்றும் 23 வயது மூர்த்தி கைது செய்யப்பட்டனர். விசாரணையில், திருவிழாவில் கெளதம் அவர்களை தகாத வார்த்தைகள் கூறி அடித்ததால், ஆத்திரத்தில் இருவரும் கௌதத்தை கொலை செய்தனர் என்று தெரிந்துள்ளது.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!