undefined

 உக்ரைன் போரில் சிக்கிக் கொண்ட  குஜராத் மாணவர்… மீட்கக் கோரி வீடியோ !

 
 

உக்ரைன் – ரஷியா இடையிலான போர் இன்று 1,397வது நாளாக நீடித்து வருகிறது. ஆயிரக்கணக்கான உயிர்களை காவு வாங்கிய இந்த போரில் உக்ரைனுக்கு அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகள் ஆதரவு அளித்து வருகின்றன. போரை முடிவுக்கு கொண்டுவர அமெரிக்க அதிபர் டிரம்ப் முயற்சி எடுத்தாலும், 28 நிபந்தனைகள் கொண்ட உடன்படிக்கையை உக்ரைன் ஏற்க மறுத்ததால் போர் தொடர்கிறது.

இந்த நிலையில், ரஷியாவுக்கு படிக்க சென்ற வெளிநாட்டு மாணவர்கள் போரில் ஈடுபடுத்தப்படுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. அதிக சம்பளம், சலுகைகள் என்ற ஆசையில் சில மாணவர்கள் ரஷிய ராணுவத்தில் சேரும் சம்பவங்களும் நடைபெறுகின்றன. அந்த வகையில் குஜராத்தை சேர்ந்த முகமது ஹுசைன் உயர் கல்விக்காக ரஷியாவுக்கு சென்ற நிலையில், ராணுவத்தில் சேர்க்கப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

போரின் போது உக்ரைன் படைகளால் முகமது ஹுசைன் கைது செய்யப்பட்டுள்ளார். தற்போது உக்ரைனில் கைதியாக உள்ள அவர், தன்னை மீட்க மத்திய அரசுக்கு உருக்கமான வேண்டுகோள் விடுத்துள்ளார். உக்ரைன் அதிகாரிகள் வெளியிட்டுள்ள அவரது வீடியோ சமூக வலைதளங்களில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!