தொழிற்சாலையில் திடீர் கத்திக் குத்து வெறியாட்டம்… 8 பேர் படுகாயம்...
ஜப்பானில் டோக்கியோவுக்கு மேற்கே உள்ள மிஷிமா நகரில் அமைந்துள்ள ரப்பர் தொழிற்சாலையில் திடீர் கத்திக்குத்து தாக்குதல் நடந்தது. வெள்ளிக்கிழமை கத்தியுடன் புகுந்த நபர், அங்கிருந்த தொழிலாளர்களை சரமாரியாக தாக்கினார். தொழிற்சாலை வளாகம் முழுவதும் பதற்றம் நிலவியது.
இந்த தாக்குதலில் 8 பேர் காயமடைந்தனர். காயமடைந்த அனைவரும் உடனடியாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். அவர்களின் உடல்நிலை குறித்து அதிகாரப்பூர்வ தகவல்கள் வெளியாகவில்லை.
தாக்குதல் நடத்திய நபரை தொழிற்சாலைக்குள் தடுத்து வைத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. சம்பவம் குறித்து ஜப்பான் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். அமைதியான ஜப்பானில் நடந்த இந்த தாக்குதல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!