ஜனவரி 19ம் தேதி சிபிஐ விசாரணைக்கு ஆஜராக சம்மன்?!
கரூர் துயர சம்பவம் தொடர்பான சிபிஐ விசாரணையில் தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் இன்று டெல்லி சிபிஐ தலைமை அலுவலகத்தில் ஆஜரானார். காலை 7 மணிக்கு சென்னையில் இருந்து தனி விமானத்தில் புறப்பட்ட அவர், காலை 11.30 மணிக்கு விசாரணைக்கு முன்னிலையானார். மாலை 6.15 மணி வரை விசாரணை நீடித்தது.
சிபிஐ டிஎஸ்பி தலைமையிலான குழு, 90 கேள்விகள் அடங்கிய கையேட்டை விஜயிடம் வழங்கி பதில்களை பெற்றது. கூட்டத்திற்கு தாமதமாக வந்தது ஏன், அன்று இரவு அவசரமாக சென்னை திரும்பியது ஏன், கூட்ட நெரிசலை கட்டுப்படுத்த என்ன திட்டமிடப்பட்டது போன்ற கேள்விகள் எழுப்பப்பட்டன. விஜய் அளித்த பதில்கள் ஆங்கிலத்தில் தட்டச்சு செய்யப்பட்டு, அவரிடம் கையெழுத்து பெறப்பட்டது.
தைப்பொங்கல் பண்டிகையை முன்னிட்டு கால அவகாசம் கோரியதால், அடுத்த கட்ட விசாரணை பொங்கலுக்குப் பிறகு நடைபெறும் என சிபிஐ தெரிவித்துள்ளது. கடந்த ஆண்டு கரூரில் நடந்த தவெக பொதுக்கூட்ட நெரிசலில் 41 பேர் உயிரிழந்த சம்பவம் தொடர்பாக இந்த விசாரணை நடைபெற்று வருகிறது. இன்றைய விசாரணை இந்த வழக்கில் முக்கிய திருப்பமாக பார்க்கப்படுகிறது.டெல்லி சிபிஐ அலுவலகத்தில் ஜன. 19ஆம் விஜய் ஆஜராக சம்மன் அனுப்பப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!