300 அடி பள்ளத்தில் கவிழ்ந்த டிப்பர் லாரி... லோடு மேன் பலி!
நாமக்கல் மாவட்டம் பெரிய சூரம்பாளையத்தில் உள்ள தனியார் கல்குவாரியில் நேற்று முன்தினம் மாலை விபத்து ஏற்பட்டது. 300 அடி ஆழமான பள்ளத்தில் இருந்து மண், கற்களை ஏற்றிக்கொண்டு டிப்பர் லாரி மேலே வந்தது. அப்போது பாரம் தாங்க முடியாமல் லாரி திடீரென கட்டுப்பாட்டை இழந்தது.
இதையடுத்து அந்த லாரி பள்ளத்திற்குள் கவிழ்ந்தது. இந்த விபத்தில் லாரியில் இருந்த லோடு மேன் சுப்பிரமணி (64) பலத்த காயமடைந்தார். மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லும் வழியில் அவர் உயிரிழந்தார்.
விபத்தில் காயமடைந்த டிரைவர் வேணுகோபால் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். உயிரிழந்த சுப்பிரமணி கர்நாடக மாநிலம் சாம்ராஜ்நகர் மாவட்டம் கோபிநத்தம் பகுதியை சேர்ந்தவர். இந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!