undefined

கோர விபத்து... ஆட்டோ மீது அரசுப்பேருந்து மோதி  3 பெண்கள் பலி, 8 பேர் படுகாயம்! 
 

 

ஆந்திர மாநிலம் குண்டூர் மாவட்டத்தில்  நீருகொண்டா கிராமத்தில் மிளகாய் வயலில் பணிபுரிய  தொழிலாளர்கள் ஆட்டோவில் சென்று கொண்டிருந்தனர்.

இந்த ஆட்டோவை அம்மாநில அரசு பேருந்து மோதி கோர விபத்து ஏற்பட்டது.  இந்த கோர விபத்தில் 3 பெண்கள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர் மற்றும் 8 பேர் காயமடைந்தனர்.  சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் படுகாயம் அடைந்தவர்களை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர்.  இந்த விபத்து மாவட்டத்தின் செப்ரோலு மண்டல் பகுதியில் நிகழ்ந்ததாக கூறப்படுகிறது. உயிரிழந்தவர்கள் அருணா, நாச்சரம்மா மற்றும் சீதாரவம்மா என அடையாளம் காணப்பட்டுள்ளனர். இவர்கள் அனைவரும் செப்ரோலு மண்டலத்தில் உள்ள சுத்தபள்ளி கிராமத்தில் வசித்து வருபவர்கள் எனத் தெரியவந்துள்ளது.

இந்த விபத்து குறித்து  போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இச்சம்பவம் குறித்து அம்மாநில போக்குவரத்துத்துறை அமைச்சர்  மண்டலி ராம்பிரசாத் ரெட்டி அதிர்ச்சியையும் வருத்தத்தையும் தெரிவித்துள்ளார். அத்துடன் படுகாயங்களுடன் குண்டூர் பொது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டவர்களுக்கு சிறந்த மருத்துவ சிகிச்சை அளிக்கும்படி அதிகாரிகளுக்கு உத்தரவு பிறப்பித்துள்ளார்.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

 உங்க நட்சத்திரத்துக்கு லாபம் தரும் துறை எது?