undefined

கோர விபத்து... சம்பவ இடத்திலேயே 9 பேர் துடிதுடித்து உயிரிழப்பு!

 
மத்திய பிரதேசத்தில், வேன் மீது லாரி ஒன்று வேகமாக வந்து மோதி விபத்திற்குள்ளானதில், வேனில் பயணித்தவர்களில் 9 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். இவர்கள் அனைவரும் திருமண விழா ஒன்றில் கலந்துக் கொண்டு விட்டு ஊர் திரும்புகையில் இந்த துயர சம்பவம் நிகழ்ந்துள்ளது.

மத்திய பிரதேசம் மாநிலத்தில் வசித்து வரும் சிலர் ஒன்றாக சேர்ந்து ஒரு திருமண விழாவில் கலந்துக் கொள்வதற்காக வேனில் சென்று கொண்டிருந்தனர். திருமண நிகழ்ச்சியில் கலந்துக் கொண்டு விட்டு, அங்கிருந்து அதிகாலைப் புறப்பட்டு தங்களது வீட்டிற்குத் திரும்பும் போது ஜபுவா மாவட்டம் அருகே வேன் சென்றுக் கொண்டிருந்தது.

அந்த வழியாக வந்த லாரி  கட்டுப்பாட்டை இழந்து வேனின் மீது மோதியது. இந்த விபத்தில் வேனில் வந்த 9 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மேலும் இரண்டு பேர் படுகாயங்களுடன் மீட்கப்பட்டுள்ளனர்.  

தகவலின் பேரில் விரைந்து வந்த  போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து விபத்தில் படுகாயம் அடைந்தவர்களை மீட்டு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். இதனையடுத்து லாரி மோதி வேன் நசுங்கியதால்  உயிரிழந்தவர்களின் உடல்களை மீட்க நீண்ட நேரம் ஆகியதாக கூறப்படுகிறது.உயிரிழந்தவர்களின் உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். இது குறித்து வழக்குப்பதிவு செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க நட்சத்திரத்துக்கு லாபம் தரும் துறை எது