undefined

 நள்ளிரவில் வீட்டுக்குள் புகுந்த காட்டு யானை… தந்தை, 2 மகள்கள் பலி!

 
 

ஜார்க்கண்ட் மாநிலம் கோயில்கேரா பகுதியில் குந்த்ரா என்பவர் வனப்பகுதியில் மரத்தால் அமைக்கப்பட்ட வீட்டில் குடும்பத்துடன் வசித்து வந்தார். நள்ளிரவில் திடீரென வீட்டுக்குள் புகுந்த காட்டு யானை ஒன்று, குந்த்ரா மற்றும் அவரது இரு மகள்களை மிதித்துக் கொன்றது. சம்பவம் நடந்த வேளையில் வீட்டில் பெரும் அலறல் சத்தம் கேட்டதாக கூறப்படுகிறது.

யானையின் தாக்குதலில் குந்த்ராவின் மனைவி உயிர் தப்பினார். மற்றொரு மகள் யானை தாக்கியதில் படுகாயமடைந்தார். அவர் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வருகிறார். இந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

யானை தாக்கி தந்தை மற்றும் இரு மகள்கள் உயிரிழந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். கடந்த இரண்டு வாரங்களில் காட்டு யானைகள் தாக்கி 7 பேர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் அந்தப் பகுதி மக்கள் அச்சத்துடன் வாழ்ந்து வருகின்றனர்.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!