சிறுவர்கள் மீது தாக்குதல் நடத்திய வடமாநில இளைஞரால் பரபரப்பு!
திருவள்ளூர் வி.எம்.நகர் பகுதியில், ஆர்.எம்.ஜெயின் பள்ளி அருகே திங்கள்கிழமை மாலை அதிர்ச்சி சம்பவம் நடந்தது. தெருவில் மிதிவண்டி ஓட்டிக்கொண்டிருந்த யோகேஷ் ராஜ் (8), கனீஷ் ராஜா (10) ஆகிய சிறுவர்களை, வடமாநிலத்தைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் திடீரென அடித்து கையை இழுத்துள்ளார். குழந்தைகள் அலறிய சத்தம் கேட்டு தாய் ராசாத்தி மற்றும் அக்கம்பக்கத்தினர் ஓடி வந்து அந்த இளைஞரை பிடித்தனர்.
உடனே போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், கஞ்சா போதையில் இருந்த அந்த இளைஞரை சிறிது தூரம் அழைத்துச் சென்றுவிட்டு விட்டதாக கூறப்படுகிறது. ஆனால் போலீசார் சென்ற உடனே, மீண்டும் திரும்பி வந்த அந்த இளைஞர், சிறுவன் யோகேஷ் ராஜை கன்னத்தில் அறைந்ததாக தெரிகிறது. இதனால் அதிர்ச்சியடைந்த பொதுமக்கள் மீண்டும் அவரை பிடித்து வைத்தனர்.
ஒரு மணி நேரத்திற்குப் பிறகே போலீசார் வந்து அந்த இளைஞரை அழைத்துச் சென்றனர். பிடித்து கொடுத்த நபர் மீது உடனடியாக வழக்குப் பதிவு செய்ய வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை வைத்தனர். விசாரணையில், அந்த இளைஞர் பிகார் மாநிலத்தைச் சேர்ந்த ருஷ்தம் குமார் பாண்டே என்பது தெரியவந்துள்ளது. அவர் ஏன் திருவள்ளூரில் சுற்றினார், யாருடன் வந்தார் என்பதைக் குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!