நெல்லையில் இளைஞருக்கு அரிவாள் வெட்டு - கடன் கேட்டதால் விபரீதம்!
திருநெல்வேலி மாவட்டம், நெல்லை சந்திப்பு அருகே கடன் வசூலிப்பது தொடர்பாக ஏற்பட்ட மோதலில், வாலிபர் ஒருவருக்கு ரத்தக்காயம் ஏற்படுத்திய நபரைப் போலீசார் அதிரடியாகக் கைது செய்துள்ளனர்.
நெல்லை மீனாட்சிபுரத்தைச் சேர்ந்த ஹரி (18) என்பவர், சி.என். கிராமத்தில் உள்ள தனது நண்பர் பாலாஜியைப் பார்க்கச் சென்றுள்ளார். அப்போது பாலாஜி, ஹரியின் செல்போனைப் பயன்படுத்தி, பாஞ்சாலராஜன் (33) என்பவரின் மாமியாரிடம் தான் கொடுத்த கடனைத் திருப்பிக் கேட்டுள்ளார்.
இதில் ஆத்திரமடைந்த பாஞ்சாலராஜன், ஹரி மற்றும் அவரது நண்பர்களைச் சி.என். கிராமம் அருகே வழிமறித்துள்ளார். தகாத வார்த்தைகளால் திட்டிய பாஞ்சாலராஜன், தான் மறைத்து வைத்திருந்த அரிவாளால் ஹரியைத் தாக்கியுள்ளார். இதில் ஹரிக்கு பலத்த ரத்தக்காயம் ஏற்பட்டது.
படுகாயமடைந்த ஹரி நெல்லை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். அவர் அளித்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த போலீசார், பாஞ்சாலராஜனைத் தேடி வந்த நிலையில் இன்று அவரைக் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!